உணர்வே மொழி

"மல்லாட்ட " என்று நான் சொல்ல.
ஏளனமாக நீங்கள் சிரித்தால்.
மாற வேண்டியது நான் அல்ல.
நீங்கள் தான்.

மல்லாட்டை...ஒரு வட்டாரத்தின் அடையாளம்

~ பிரபாவதி வீரமுத்து
மல்லாட்டை பூமி - திண்டிவனம்

குறிப்பு :
அம்மாவை அம்மா என்று தானே சொல்ல இயலும்.

வட்டாரச் சொற்கள் அதிகம் தூய தமிழ் வார்த்தைகள் தான்.அது மட்டுமின்றி மிகையான உணர்வின் மொழிகள்.
(ஈழத்தமிழ்,கொங்கு தமிழ் , மதுரை தமிழ்...நெல்லை தமிழ்...(எல்லாமே தமிழ்).. மலையாளம்....எல்லா உயிரின் உணர்வின் மொழியும் பிடிக்கும்..

உணர்வுகள் பேச மனிதமே போதும்.
கண்ணீரை துடைக்க கைகள் போதாதா?
(இன்னொரு உயிர் துடிக்கும் பொழுது துடிக்கும் உணர்வே மனிதம்...
அதற்கு சாதி கிடையாது, மதம் கிடையாது (தெரியாது), மொழி கிடையாது, நிறம் கிடையாது(கருப்போ , சிவப்போ என்று பார்க்க தெரியாது), பால் கிடையாது(ஆண், பெண் பார்க்க தெரியாது) , ஏற்றத் தாழ்வு பார்க்க தெரியாது...அந்த உணர்வுக்கு எந்த எல்லையும் கிடையாது...

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்....)

கண்ணு என்று பேசும் பொழுது. அதில் தான் எவ்வளவு பாசம்...
மனதின் வெள்ளந்தி பேச்சு...

காமராசர் ஐயாவோட மண் மணமிக்க பேச்சு ... பிடிக்கும்.)

உணர்வோடு பேசுவோம்...
தமிழாக இணைவோம்...
தமிழாவோம்...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (6-Nov-17, 8:26 am)
Tanglish : unarvey mozhi
பார்வை : 103

மேலே