இயற்கை கொலை

அறிமுகம் :
~~~~~~~~
இறைவன் படைப்பில் எத்தனை அதிசயங்கள் இருந்தாலும் "பஞ்ச பூதங்கள்" மட்டுமே பெருமளவில் இயற்கை அதிசயங்கள் என்று அழைக்கப்படுகின்றது. நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற நாங்கள் இயற்கை என்று அனைலவராலும் அழைக்கப்படுகின்றோம்.
நாங்கள் அனைவரும் இயற்கை என்றும்; எங்களை சார்ந்தவைகள் இயற்கை காரணிகள் என்றும் அழைக்கப்படுகின்றது. நாங்கள் எப்படி தோன்றினோம் என்று எங்களை குறிப்பிட்டுச் சொல்ல அளவில் நாங்கள் உள்ளோம். இளமை என்ற ஒன்று எங்களுக்கு மட்டுமே சொந்தமாக உள்ளது. அப்படி இருக்கும் போது " வாழும் நாட்களையே உறுதியாக சொல்ல முடியாத மனித இனம்" எங்களை கொலை செய்கிறார்கள். இதனை எங்கள் வழி(லி)யில் இக்கட்டுரையில் காணலாம்.


ஆகாயம்
~~~~~~~
பருவ கால மாற்றதின் போது உலகத்தின் பார்வையே அவர்களை பார்க்காத என்மீது தான் இருக்கின்றது. எத்தனை வேளிகளை என் உடையாக உடுத்தி நான் காட்சியளிக்கின்றேன் என்று உங்களுக்கு தெரியுமா?.

மேகம் என்றும், வலி மண்டலம் என்றும், காற்று என்றும், ஒளி கொண்டும் என்னை பாதுகாத்து வருகின்றேன். ஆனால் பாவபட்ட மனித இனம். என்னை அழிக்க முன் வருகின்றது.

நான் விழிகளால் கண்ணடித்து என் வின்மீன் கூட்டத்தினை கீழே கொட்டினால் நீங்கள் குடையில் சென்று ஒளிந்து கொள்ள முடியுமா?. இல்லை கொபுரங்களின் மத்தியில் குடியேர முடியுமா?.
நான் ஒருவன் நினைத்தால் இந்த பூமியில் ஒரு உயிர்கள் கூட வாழ முடியாது. இப்படி இருக்கும் அமைப்பில் நீங்கள் என்னை கொலை செய்ய முன் வருகிறீர்களா?

காற்று
~~~~~~
மனிதர்களே காற்று என்ற நான் இன்றி இங்கு எத்தனை மனிதர்கள் வாழ முடியும் என்று முன்வந்து காட்டுங்கள். நான் என் முரண்பட்ட கருத்தை முழுவதும் மாற்றிக் கொள்கிறேன்.

ஒற்றை மனித கூட்டில் ஒருவழீ சென்று. மறுவழி நான் வெளிவரும் வேளையில் தான் உயிர் என்றே என்னை இந்த உலகம் அழைக்கின்றது. உடல் கொண்ட உன்னை உருவம் இல்லாத நான் நீங்கினால். இந்த உலகே உன்னை எப்படி அழைக்கும் என்று தெரியுமா?. உன் பிறப்பிற்கே அர்த்தம் இன்றி "பிணம்" என்று அழைக்கப்படுவாய்.

உன் உறவுகள் மத்தியில் உன்னை அனாதையாக மாற்றாமல் அறவனைத்து வரும் "என்னை". நீ அழைக்க வருகிறாயா?.

நெருப்பு
~~~~~~
" என் அங்கம் இல்லையென்றால் இந்த அகிலமே இருட்டு தான்". இருளாகவே இவ்வுளகில் நான் இருந்தால் எத்தனை மனிதர்களால் ஒளியாக வரமுடியம்?!. எங்கு என்று நான் எட்டிப்பார்த்த போதும் எவரும் முன்வர முடியாது.

கைக்கூப்பி என்னை வணங்கும் வரை உன் கடவுளாக இருப்பவன் நான். உன் கைளால் என்னை மூட நினைத்தால் உன் உடல் கூடும் என்னை நெருங்க முடியாது. காரணம் நான் நெருப்பு. அப்படி பட்ட என்னை நீ அழிக்க வருகிறாயா?.


நிலம்
~~~~~
"மனிதர்களே" உங்களை சுமப்பவளே பத்து திங்கள் (10 மாதம்) மேல் உங்களை எடையை தாங்க முடியாமல் இடுப்பு வலியால் உன்னை கீழே இறக்கி வைக்கிறாள். இருந்தும் எனக்கு இம்சைகளாக நிங்கள் இருந்தும் உங்களை இறுதிவரை நான் சுமந்து வருகிறேன்.

உன் உயிர் அது. உன்னிடம் வாழ. என் உடமைகளை உணக்கு உணவாக அளித்து வருகின்றேன். நீ உறங்கவும், உழைக்கவும் உனக்கே உறுதுனையாக நான் இருக்கிறேன். ஆனால் நீ " யாரிடம் உரிமை வாங்கி வந்து என்னை துண்டாடுகிறாய்".

தன்னை அற்பணித்து தூங்கவும் , தங்கவும் நான் உனக்கு இடம் கொடுக்கிறேன். துயரம் என்று அழைத்து என்னை நீ அழிக்கிறாயா?.

நீர் ( இவற்றில் நதிகளின் பங்கு)
~~~~~~~~~~~~~~~~~~~~~~
மேகமிடம் மோகம் விலகி
அருவிகளில் உறவாடி
மணல்களில் உடலகூடி
கடல்தேடி செல்லும்
நான் தான் நதி...!

மானம் கொண்டு வாழும் மனித இனத்தை மரணம் கொண்டு செல்லாமல் இருக்க மழையாக நான் வருகின்றேன். அதை மறந்து ஏன்? மனித இனம் என்னை சேமிக்க மறந்துவிட்டீர்கள்.

மழையாக நான் வந்து என் விருப்பம் போல் தானாக எல்லா இடங்களிலும் சென்று என் இல்லறமான கடலில் கலந்துவிடுகின்றேன். கண்கொண்டு இருக்கும் மனிதர்கள் அதை ஏன் பார்க்காமல் போகிறீர்கள்?. "ஆகாயத்தில் உதயமாகி அடி மண்ணில் அடிமையாகும் வரை என் பணியை நான் செய்கிறேன். என்னை பங்கெடுக்கும் உரிமை உனக்கு யார் கொடுத்தது?. பாசம் என்று நான் என்னை உங்களுக்கு பங்களிக்கிறேன். ஆனால் நீங்கள் என்னை பணமாக மாற்றி கொண்டு செல்கிறீர்கள்.

உங்கள் பார்வைக்கு எட்டாமல் நான் சிலகாலம் பதுங்கி கொண்டால் நீ எப்படி இருப்பாய்? என்று கற்பனை செய்து பார். பிறப்பு என்ற ஒன்றையே நீ வெறுத்து விடுவாய். இப்படி இருக்கும் நீ. என்னை அழிக்க நினைக்கிறாயா?.

முடிவுரை
~~~~~~~~
நீர் என்றும், நிலம் என்றும், காற்று என்றும், ஆகாயம் என்றும், நெருப்பு என்றும் இயற்கையின் அங்கமாக நான் இல்லாமல் இருந்தால். ஆண் என்றும், பெண் என்றும் நீ அழகாக வாழமுடியுமா?. நாங்கள் இன்றி நீ உயிர் வாழ முடியுமா?. நாங்கள் இன்றி உங்களால் என்ன செய்ய முடியும் என்று எண்ணிப்பார். இறக்கம் என்ற ஒன்றை காட்டி இத்தனை நாள் உங்களை இயற்கையாகிய நாங்கள் வாழ வைக்கின்றோம். ஆனால் நீங்கள் எங்களை அழிக்க முன்வருகிறீர்கள்.

இயற்கையாகிய எங்களை நீங்கள் கொலை செய்யும் போது பதிலுக்கு உங்களை நாங்கள் கொலை செய்தால். உங்களால் என்ன செய்ய முடியும்?.

நீதி மன்றத்திடம் நீதி நாட முடியும்?, காவல் துறையிடம் காவல் செய்ய முடியுமா?, சட்டத்திடம் சமாதானம் பேச முடியுயா?.

கொலை என்பதை உங்களால் மட்டும் செய்ய முடியும் என்று என்ன வேண்டாம். இயற்கை என்ற எங்களாலும் கொலை செய்ய முடியும். அதுதான் "இயற்கை கொலை".

மனிதனாக இம்மண்ணில் நீ
வாழும் வரை
இயற்கையை மதிக்க கற்றுக்கொள்...!


இப்படிக்கு
----- இயற்கை--

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (7-Nov-17, 7:21 pm)
பார்வை : 1235

மேலே