பீனிக்ஸ் வாழ்க்கை
பற்றியயெரியும் சந்தேகச்சந்திரன் அவள்
சூரியனையே சுட்டெரிக்கும் செவ்விழி
அவள் அரன்
அழகான அச்சந்திரனின்
கோலிக்குண்டு கண்ணுக்குள்ளே
குடிபெயர்ந்திடலாம் என்றெண்ணி -தினம்
நெருப்பினை எரிப்பதும் எரிவதுமாய் நகர்ந்துக்கொண்டிருக்கிறது
பீனிக்ஸாய் இவன் வாழ்வு
மரணமும்
உயிர்த்தெழுதலும் மட்டும்
தொடர்ச்சியாய்...