எதிரியை விரும்பும் போர்க்களம்

மின்விசிறி ஓடுவதை
நிறுத்திய பின்பும்
போர்வை தேவைப்படும்
ஐப்பசிக் குளிர்...
தூக்கம்... அது
இரவில் நண்பன்
காலையில் எதிரி...

பணியின் நிமித்தம்
விழித்தெழுவதற்கு
தூக்கத்தோடு ஒரு
சிறு யுத்தம் இந்த
அதிகாலையில்...

ஐந்து நிமிடங்கள்
தூங்கிக் கொண்டே
தூக்கத்தோடு நடந்த
நட்பும் பகையும் கலந்த
ஒரு விதமான போரில்
தூக்கம் தோற்றது...
எதிரியை விரும்பும்
போர்க்களம் இதுவாகத்தான்
இருக்கும்...
😀🙋🏻‍♂👍

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (8-Nov-17, 10:15 am)
பார்வை : 342

மேலே