தடம் இதழில் ஜெயமோகனின் பத்தி
‘காட்டைப் படைக்கும் இசை ‘ என்னும் தலைப்பில் ஜெயமோகனின் பத்தி தடம் இதழில் வெளியாகி வருகிறது.
அக்டோபர் 2017 இதழில் அவர் சமகால நிகழ்வுகளில் எழுத்தாளர்கள் குரல் கொடுப்பது மற்றும் பங்களிப்புச் செய்வது பற்றி எழுதுகிறார். ஒரு இலக்கியக் கூட்டத்தில் அவரை எதிர்கொண்ட ஓர் இளைஞர் நீட் தேர்வு தொடர்பான கொந்தளிப்புச் சூழல் இருக்கும் போது எதற்கு இலக்கியக் கூட்டமெல்லாம் என்று வினவுகிறார். எப்படி வேறு எதை பற்றியம் சிந்திப்பது அல்லது விவாதிப்பது சாத்தியம் ஆகிறது என மனம் வருந்துகிறார்.
இது தொடர்பான ஜெமோவின் பதில் சிந்தனைக்குரியது. பண்பாட்டை உருவாக்குவதும் மறு வரையறை செய்வதும் இலக்கியம் எனபதை ஜெமோ நமக்கு நினைவு படுத்துகிறார். இன்று சனகாலமான ஒன்று நாளை வரலாறாகும் போது அது கண்டிப்பாக எழுத்தாளனின் கவனத்தைப் பெறுகிறது .புனைவிலோ அல்லது கட்டுரையிலோ அவன் அதைப் பதிவு செய்கிறான்.
வரலாறு மற்றும் பண்பாட்டுத் தளங்களில் இலக்கியத்துக்கு முக்கிய இடம் என்றும் உண்டு. இதனாலேயே ஒரு இலக்கியவாதி பரபரப்பான ஒன்றைப் பயன்படுத்திக் கொள்பவனாக இருப்பதேயில்லை. அரிதாகவே சமகால வாழ்கையை அவன் மையப் படுத்துகிறான்.
சுமார் நாற்பது வருடங்கள் முன்பாக ஜெயகாந்தனின் ரிஷிமூலம் நாவல் வெளிவந்த போது இதே கேளிவிகள் அவர் முன் வைக்கப் பட்டன. பதின் வயது சிறுவனின் காமம், மற்றும் அது தொடர்பான குற்ற உணர்ச்சி பற்றி எழுத இது நேரமா என்னும் கேள்விக்கு அவர் தமது இயல்பேயான முகத்தில் அடிக்கும் பதிலைக் கொடுத்திருந்தார்.
எழுத்தாளனின் ஆழ் மனம் எப்போது உள்வாங்கியதை எப்போது ஆசை போட்டு எப்போது எழுதும் என்பது நதிமூலம் போலவே யாருக்கும் வசப்படாத ஒன்றே . அவனது சுதந்திரம் அது .