உசுரே உன்னோட சேர
பைத்தியம் இருவகை என்றால்
பெண்நீயும் நானும் உதாரணமோ?
சாத்தியம் ஆகுமோவாழ நீயன்றி
வைத்தியம் ஏதேனும் உண்டோ?
உயிர்பயம் கண்டு மீண்டும்
காதல்வலி தினம் கொல்லுதடி...
உசுரே உன்னோட சேர
உருகுதே என்னோட மனசு...
தேனில் ஊறிய சுளைபோல்- என்
இரத்தத்தில் ஊறிய கலையே
வறண்டு திரிந்த வெண்மேகத்துக்கு
வாழ்க்கை கொடுத்த கானல்நீரே
இருண்டு கிடந்த இதயக்கூட்டில்
திருவிளக் கேற்றிய தெய்வமே
உசுரே உன்னோட சேர
உருகுதே என்னோட மனசு...
யாரோ என்னிடம்குறை கொள்ளாதிருக்க
ஆராய்ந்து வார்த்தையில் வறுப்பாய்
புதுசுபுதுசாய் காரணம் கொள்வாய்
விதம்விதமாய் சண்டைகள் இடுவாய்
விடியும்முன் முடியும் சண்டைகளில்
வெல்வது எப்போதும் நீயல்லவா?
உசுரே உன்னோட சேர
உருகுதே என்னோட மனசு...
வேலையில் அயர்ந்து மறந்தாலும்
வேளையில் கோப்பைநீர் தருவாய்
அதட்டிநான் உன்னை திட்டையிலே
உதட்டை கசக்கி சமாளிப்பாய்
காலையில் நானெழ காதோரமுத்தம்
பசிக்கும் போதெல்லாம் வாயோரமுத்தம்
அன்பேநீதான் வாழ்வின் வசந்தம்...!
உன்பேரேஎன் இதயத்து சத்தம்...!
என்னவொரு வண்ணமயம் வாழ்க்கை
உன்கண்கள் மூலம்தினம் நான்பார்க்க...!
அடவுகள் ஆயிரம் கண்டேன்-உன்
அசைவுகள் யாவிலும் தினமும்
நிலாமுன் பாராமல் என்றேனும்
சிலநாள் சூரியன் உறங்குவதுண்டு
மஞ்சத்தில் என்நெஞ்சில் நீயன்றி
மறந்தும் மரணத்தும்நான் கண்மூடேன்..!
வளியற்ற புவியில் உயிரில்லை
ஒளியற்ற நிலவோ தெரிவதில்லை
நீயற்ற நானோ இல்லவேயில்லை
காயங்கள் ஆறிடநீயன்றி வேறில்லை
அயனியை இழந்த சேர்மமாய்
புயலொன்று நம்மை பிரிக்க
உசுரே உன்னோட சேர
உருகுதே என்னோட மனசு...
தான்பூத்த போவதுஎங்கோ வாடிட
துடித்து தவிக்கும் செடிபோல
இதயத்தாமரை நீயங்கு தவிக்க
இயலாமைகண்டு நானென்னை வெறுக்க
ஏனிந்த அவலநிலை நாம்பிரிய
நானிங்கே நீயெங்கோ நானறியேன்
உசுரே உன்னோட சேர
உருகுதே என்னோட மனசு...