கற்பனை காதல்

கற்பனையாய் தோன்றவில்லை
அவள் கரம் பிடித்த வேளையிலும் ........
தூரமாய் தோன்றவில்லை
அவள் கைகோர்த்து நடந்த தொலைவுகளும் ........
காலங்கள் கடந்த போதும்
உரையாடல்கள் இன்னும் ஓயவில்லை........
ஓராயிரம் மகிழ்வுகள் என்னுள் இருக்க
ஒரு கணம் சிந்த்தித்தேன் .......
இது என்ன மாயையா
விழி மூடா வேளையிலும்
உன்னோடு நான் பயணம் செய்கிறேன் .............
விடையாய் உணர்ந்தேன் உன்னை
என் கற்பனை காதலியே ..........

-விக்னேஷ் கர்ணன்

எழுதியவர் : விக்னேஷ் வரன் (8-Nov-17, 5:31 pm)
Tanglish : karpanai kaadhal
பார்வை : 571

மேலே