வினோத விளையாட்டு

நீரை கிழித்து,
நின்ற இடம் மறந்து,
அக்கரை தேடி,
ஆட்களை துரத்தும்,
அக்காலத்து விநோதமிது...

கண்கள் மிளிர்கிறது,
காவியமாய்ப்பூக்கிறது,
காதுகளை கிழிக்கிறது,
கரை சேரத்துடிக்கும் படகின்
கண்கொள்ளா காட்சிதனில்...

நவீனங்கள் தலைக்கேரியும்
நாமறியாத வில்லம்பும்,
விலைபோகாத வேடிக்கை விளையாட்டுக்களும்
இன்னும் வியப்பாகவே நம்முள்.

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (9-Nov-17, 12:43 pm)
பார்வை : 95

மேலே