நான் வாக்கப்பட்டு போறேன்

நான் வாக்கப்பட்டு போறேன் என் வீட்ட விட்டு போறேன்.
சொந்தம் விட்டு போறேன் என் இரத்தப்பந்தம் விட்டு போறேன்.
மனச விட்டு போறேன் மகிழ்ச்சிய விட்டு போறேன்.

அண்ணன் சட்ட போட்டு தம்பினு சொல்லிடுவேன்.
அம்மா ஆக்கி வச்சி சோத்த அப்படியே தின்னுடுவேன்.
அண்ணன் வந்து கேட்கையில வெள்ள பூன தின்னுடுச்சினு பொய்ய நானும் சொல்லிடுவைன்.
அப்பா வண்டிய ஓட்டி நானும் வழுக்கி கீழ விழுந்துடுவேன்.
யார்கிட்டயும் சொல்லாம அமைதிய இருந்திடுவேன்.

நான் வாக்கப்பட்டு போறேன்
என் வீட்ட விட்டு போறேன்.....

ஊரு வம்பு வாங்கி நானும் வீடு வந்து சேர்ந்துடுவேன்.அதனால அம்மா கிட்ட அடி வாங்கி அழுதிடுவேன்.
அப்பா வந்து கேட்கையில இன்னும் சத்தம் போட்டு அழுதிடுவேன்.

நான் வாக்கப்பட்டு போறேன்
என் வீட்ட விட்டு போறேன்...

கழுத வயசு ஆயிடுச்சி அடுப்பு பத்த வக்க தெரிலனு அம்மாவும் பேசிடுவா.
அழுக்கு துணி தொவக்கலனு அண்ணணும் திட்டிடுவான்.

இப்படி இருந்த நான் என்ன செய்ய போறேன் ஏது செய்ய போறேன் புகுந்த வீட்ல.

நான் வாக்கப்பட்டு போறேன்
என் வீட்ட விட்டு போறேன்...

எழுதியவர் : ஜெ ஜெயசூர் (9-Nov-17, 7:54 pm)
பார்வை : 81

மேலே