ம. ரமேஷ் ஹைக்கூ

•கோயில் வாசலில்
குருடர்கள்
சாமி கண்ணை குத்தியிருக்குமா?

•மழைச் சேறு
கால் தடங்கள்
அழகானக் கோலம்

•கொலை,கொள்ளை,விபத்து.
கடைசியில் புன்முறுவல்
செய்தி வாசிப்பாளர்கள்

•பொன்வண்டு
தீப்பெட்டியில் முட்டை
இப்போது மனம் வலிக்கிறது

•பசியோடு வரும்
மரணம்
உன்னையே பரிமாறு

•காதலர்கள் தற்கொலைக்கு
அறிவியல் பெயர்
வயிற்று வலி

•பிச்சையின் கையில்
ஒரு திருவோடு
கோயிலில் நூறு உண்டியல்

•கடமையைச் செய்
பலனை எதிர்பார்
புதுமொழி

•கடவுள் சிலையானான்
கருங்கல்லால் அல்ல
பொன்னால்

எழுதியவர் : ம. ரமேஷ் (29-Jul-11, 10:26 am)
பார்வை : 360

மேலே