காதலில் தோல்வி
எனக்கும் உனக்கும் மட்டும்தான் தெரியும்
நம் காதல் ; காதும் காதும் வைத்தாற்போல்
நாம் கொஞ்சி உறவாடியது கட்டிப்பிடித்து,
முத்தம்கொடுத்த இந்த மோக விளையாட்டுகள்;
இவை அத்தனையும் யாரறிவார்
நீயும் நானும் தவிர - என்னவனே! இந்த
காதல் உறவு தொடரும், தொடர்ந்து
மங்கலமாய் மணமேடையில் முடியும்
திருமணமாகி, உற்றார்,உறவினர்
மற்றும் ஊரார் வந்து மகிழ்ந்து
எமக்கு வாழ்த்துக் கூற -என்று
நான் ஒவ்வொரு இரவும் கனா கண்டு
இன்ப வானில் பறந்துவந்தேன்
இன்று வந்து நீயோ கூறுகிறாய்
'இந்த நம் உறவை ஒரு பகற்கனவாய் எண்ணி
மறந்துவிடு என்று கூறி சென்று விட்டாய்
என்ன செய்வேன் இனி நான்
எங்கு செல்வேன் , யாரிடம் முறையிடுவேன்,
எங்கள் காதல் ரகசிய காதலாய்
யாருக்கும் தெரியாமல் நடந்திருக்கையில்
இது நான் செய்த தவறா என்று எண்ணி
கன்னியாய்க் காலத்தை கழிக்கவா?
இல்லை அவன் செய்த குற்றத்தை
அம்பலமாக்கவா ......................அதில்
அதிலும் எனக்கல்லவோ பாதிப்பு !
புரியாமல் தவிக்கின்றேன் .......
மனம்விட்டு காதலித்தது என் தவறா
ஆசைக் காட்டி மோசம் செய்த அவனை
தண்டிப்பார் யார் .........????????????????
'நண்பனைப் பார்த்து நேசம் கொண்டு
நட்பை வள' என்பார் ஆன்றோர்
காதலிக்கும் முன் காதலிப்பவன்
மனம், தகுதி ஆய்ந்து பார்ப்பதும் தவறில்லை
இது அவசியமும் கூட ..............
-