நீ போகும் வழிலியில் நான்
எதற்கும் விலை போகாத என் வலியும்,
எவராலும் மதிக்கப்படாத என் உணர்வுகளையும்,
அவளால் தினமும் நொந்தே சாகும் மனதையும்,
எத்தனை நாட்கள் சுமக்கும் என் உயிர்....
.............
கடைசியாய் ஒரு கடிதம் எழுதுகிறேன்,
புன்னகையுடன் காதலை சுமந்த காகிதங்கள்
இன்று மரணத்தையும் சுமக்கட்டும் அவளாலே....
மார்பில் உன்னைத்தலாட்டவே
மதி மயங்கி உன்னிடம் மன்றாடி நின்றேன்
அழியாமல் காக்க உன் அழகிய அன்பிற்காய்
அடம்பிடித்து நின்றேன்,,,
உன்னை நான் அடைவதற்குள்
முள்ளாய் நீ என்னுள்
விட்டெறிந்த வார்த்தைகள் கூட
விரோதியாய் உன்னை பார்த்ததில்லை,,,,
என்னோடு நீ இருந்த பொழுதெல்லாம்
எதுவுமாரியக்குழந்தைபோல்
உன் சிரிப்பில் தவழ்ந்திருக்கிறேன்,,,
எனக்கு என்ன ஆனாலும்
விட்டுவிடாதே என்ற நீயா...?
என்னை விட்டு விடு என்கிறாய்,,,
தீயிலிட்டு புழுவாய் துடிக்கிறேன்
உன் தீண்டலின் நினைவுகளை தின்ற படி,
திரும்பி ஒரு முறை பார்...!
உன் இதயம் என்னை சுமக்குமாயின்,,,
சந்தோஷத்தின் எல்லை வரை
கொண்டு சென்றாய் என்னை அந்த நொடியில்-
எதுவும் வேண்டாம் உன் ,
அன்பு கலந்த அழகைத்தவிர,,,இப்போ ,
தொட்டதையெல்லாம் விடச்சொல்லி
உயிருடன் கொண்றுவிட்டுப்போகிறாய்,,,
என்ன தவம் செய்தேன் நான்
என்னில் நீ சாய்ந்து கொள்ள...?
என்ன பாவம் செய்தேன் நான்
மண்ணில் நீ என்னை சாய்த்துவிட...?