நீரின்றி என் பிரபஞ்சம் ஏது

என் தோட்டத்தில் பூத்த மலரே...
மாடத்தில் உதித்த வெண்ணிலவே...

மான்கள் விளையாடும் காடே...
கண்கள் அலையாடும் கடலே...

நின்னை நினைந்து நினைந்தே
நான் சுவாசிக்கிறேனே...

நேசிக்கும் மலைகளில்
வாசிக்கும் சிலைகளில்
யாசிக்கும் வலைகளில்

நீரினை குடித்து வாழும்
மீனினை போலே...
என் பிரபஞ்சனை சுவாசித்து
வாழும் மங்கை நானே...
நீரினை பிரியும் மீன்
இறந்திடும் அதுபோலே
உன்னை நீங்கிடும் நான்
இறந்திடுவேனே...

நீருக்குள் தான் மீன் வாழும்...
உனக்குள் தான் நான் வாழ்வேன்...

என் வாழ்வும் சாவும் நீரோடே...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (12-Nov-17, 3:40 pm)
பார்வை : 77

மேலே