காதல்
ஈருடல்களின் சுவாச
பறிமாற்றம்...
காதல்!
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
இறுக்கத்திலும்
இரக்கம்...
காதல்!
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
நீ எதுவாகிலும்
நானும் அதுவேயாகிறேன்...
காதல்!
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
களைப்பின்
இளைப்பாறுதல்
காதல்!
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
இணைந்த இதயங்களின்
ஆனந்த தாண்டவம்...
காதல்!
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
உறவென்றால் ஆயிரம்..
உயிரென்றால் நீ மட்டும்...
காதல்!
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
உனக்கு நான் இருக்கிறேன்
என்பதையும் தாண்டி...
உனக்காகவே நான் இருக்கிறேன்
என்னும் நம்பிக்கை
காதல்!