இது கவிதை அல்ல கறை

கறையை நீக்கி
கரைந்து போகும்

#Soap_சோப்பு_சவர்க்காரம்
#அக்கறை

~ பிரபாவதி வீரமுத்து

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உடலின் கறையை நீக்கிடலாம்
பாத்திரத்தின் கறையை துடைத்திடலாம்
உடையை அலசிடலாம்
உயிர் பாத்திரத்தின் கறையை அலசிடலாகுமா!
(மாற்றிடலாகுமா!)

* ஒரு நொடி (ஒரு இடத்தில்) தவறினாலும் அதுவும் கறை தான்...

முடியும் என்றால் எதுவும் விடியும்...

மனதை ஏற்று தேற்றி
திருந்தி வாழலாகும்...
வால்மீகியாய்...

#மனிதம்

நல்ல பெயரை எடுக்க ஒரு யுகம் தேவை.
கெட்ட பெயரை எடுக்க ஒரு நிமிடம் போதும்.

குணாதிசயத்தை சிரமப்பட்டு மாற்றிடலாகும்.
ஆனால் அது கொடுத்த கண்ணோட்டத்தை எளிதாக மாற்றிடவே இயலாது.

காயம் ஆறினாலும் வடு இருக்குமல்லவா...
கறை நீங்கினாலும் தடம் இருக்குமல்லவா...
அது போல் மனிதனின் மனதில்
ஒரு தடவை உதித்த எண்ணம் காலத்திற்கும் கேள்வி கேட்கும்...
சந்தேகம் கொள்ளும்...

கண்ணாடி கீழே விழுந்து உடையவில்லை
என்றாலும்
கீறல் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும்
பலருக்கு

ஆதலால் மனிதா
சிந்தித்து செயலாற்று...

கணவன் மனைவி புரிதல் தான் வாழ்க்கை...
எல்லா உறவுக்குள்ளும் ஒரு புரிதல் உள்ளது...
அந்த உறவுக்குள் இருக்கும் நம்பிக்கையை என்றும் காப்பாற்ற வேண்டும்...
நாம் அவர்களிடம் எதிர்பார்ப்பது போல்
நாமும் அவ்வெதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும்...

தன் கணவனுக்கு /மனைவிக்கு மட்டுமே
நான்...
என்ற நிலையை என்றென்றைக்கும் எப்பொழுதும் நிறைவேற்றிடல் வேண்டும்...

சக பயணியின் இடுப்பை இச்சையோடு பிடிப்பதும் கறை தான்...

தன் நண்பனின் பணத்தை திருடப் பார்ப்பதும் கறை தான்...

மக்களின் வரிப்பணத்தில்
மக்களின் தேவைகளை செய்யாமல்
ஊழல் செய்வதும் கறை தான்...

மக்களை ஏமாற்றி நடிக்கும் அரசியலும்...வணிகமும்...
இயற்கை வளங்களை...அடையாளத்தை திருடுவதும் கறை தான்...

அதிலும் ஒருவரின் அடையாளத்தை...
ஒரு இனத்தின் அடையாளத்தை
திருடுவது
பல கொலைகளுக்கு சமமாகும்...

கறையில் பெரியது சிறியது இல்லை...
கறை என்றால் கறை தான்...

எதையும் யோசிக்காமல் செய்யாதீர்...
இன்றோடு முடிந்து விடுவது போல்...
நாளை முகத்தை வெளியே காட்ட வேண்டும்...

#அறம்
#ஒன்றிருக்கஒன்றுவந்தால் #ஊழல் #திருட்டு #நடிப்பு
#இயற்கையைஅழித்தல்
#இயற்கையின்றிஏதுஉலகம்
#மனிதம்
#மனிதம்இன்றிஉலகம்இயங்காது
#இயந்திரமேவாழ்க்கையாகும்

#மனிதமேவாழ்க்கை
#இயற்கையேஉலகம்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (13-Nov-17, 11:10 am)
பார்வை : 213

மேலே