பெண்ணே பெருமை கொள்

கண்மணியே , கர்வம் கொள்
நீ கருவில் இருக்கும் போதே
மரணத்தை எதிர்த்தவளே
பிறந்தும் உனை கள்ளிபாலுக்கே
பலியாக்கியது இச்சமூகமே!

பேதையே பெதும்பையே,
புரிந்துகொள், நீ வளரும் போதே
தீதும் நன்றும் அறிந்து கொள்வாயே
கண்களில் கருணை இல்லாமலே
உன்னை பார்ப்பானே

மங்கையே, மடந்தையே
மதி தெளிந்து கொள்
நீ கற்க வேண்டியது விடா முயற்சியே
உனை இழிவுபடுத்தும் அறிவிலிகளை கடந்து சாதிப்பாயே

அரிவையே தெரிவையே
அறிந்துகொள், உனை கலங்கம் செய்வானே
அவனை யோக்கியன் என்பானே
ஒப்புக்கொள்ளாதே, துயர் ஏற்றி ததும்பாதே

மனிதப் புனிதமே வீரம் கொள்
ஆற்றை மாசாக்கிவிட்டு அலட்சியம் செய்வானே
உனை கலங்கப்படுத்தி விட்டு உன்மேல் தவறு என்பானே

உலகின் மூன்றில் இரு பங்கு நீரே
சமுதாயத்தின் உயிர் மூச்சு நீதானே
பெண்ணே பெருமை கொள்!

எழுதியவர் : கவிக்குமரன் (13-Nov-17, 12:45 pm)
Tanglish : penne perumai kol
பார்வை : 4088

மேலே