அவன்

வலி..எனக்காக இறைவன்
படைத்த அற்புத படைப்பு..
நான் அவனுக்கு
எதிரி..எப்போதிலிருந்து?
மற்ற பொய்யர்
போல
சென்று அவனை
மிரட்டுவதில்லை
அன்பு மிகுதியானால்
சென்று..
உன்னையும் சற்று
பார்த்துக்கொள்
என்று பரவசமாய்
சொல்வதுண்டு..
காணிக்கை,நேர்த்திகள்,
எல்லா தடைகளையும்
தாண்டி ஆர்த்மார்த்தமாய் தான்
என் பயணம்..
போலிகளின் வேண்டுதல்கள்
பிடித்ததால் அவனுக்கு
என்னை பிடித்தில்லை
இருந்தாலும்
பரிசு தருகின்றான்
ம்ம்..அவனுக்காவது
இவளை பிடித்திருக்கின்றதே..

எழுதியவர் : இவள் நிலா (14-Nov-17, 10:12 pm)
Tanglish : avan
பார்வை : 91

மேலே