வேஷம்

கண்கள் கலங்கத்தான் செய்கின்றன,
நீ கல் சுமக்கும் தருவாயில்,
கனவுகளை களைத்து விட்டனரா கல்வி வரி விதித்த காமுகர்கள்,
பேனா கிறுக்கும் கரங்கள் பேப்பர் பொறுக்கும் அவலம்,
கற்கை நன்றே, பிச்சை புகினும்,
கலங்கப்பட்டு விட்ட கல்வி வணிகத்தால்,
வாடகை வசிப்பிடத்திற்கும் வழியற்றுப் போய் வறுமையில் திளைக்கும் வருங்கால இந்தியாவின் தூண்கள்,
இப்போது கூறுங்கள் யாரிடம் தெரிவிக்க வேண்டும் குழந்தைகள் தின வாழ்த்துக்களை???
செங்கல் சுமக்கும் சிறுவனித்திலா???
அல்ல
சிதைக்கப்பட்டு விட்ட சாமானிய சந்ததியிடமா???


Close (X)

9 (4.5)
  

மேலே