இனியாவது.....முடிவு?
கடல் மாதவே.....எங்களை காப்பாற்று.!....-என்றே,
கரையிலிருந்து, காலெடுத்துவைத்த...காலம் போயாச்சு!
மழைவருமோ?,புயல் தாக்குமோ?,சுனாமியில்....சிக்குவோமா?...,
அஞ்சிய ....காலங்களும்......மாறியாச்சு!
உடலோடு....உயிரும் சேர்ந்து வந்து......,
கரை சேர்ந்ததால்தான்......என்றே.......ஆயாச்சு.......!
எங்களுக்கு விதித்திருப்பது, இயற்கையின்சீற்றங்களை.....,
எதிர்கொண்டே .....போராடத்தான்........,
எங்களை துரத்தியிருப்பது ,என் குடும்ப எதிர்காலம்......,
என்ற......வார்த்தைகள்தான்.............,
எங்களை வருத்தியிருப்பது, கடற்ப்படை என்ற பெயரால்......,
காவு வாங்கும்......கயவர்கள்தான்.........,
எல்லையில்லா....பரந்த கடலையும்......,
பங்குபோட்டு.....அங்கும், எல்லையிட்டு......,
தமிழக மீனவர்களை....கொல்லவிட்டு......,
வருந்துவதாய்....,அரசியலை நுழையவிட்டு.....,
வேடிக்கை பார்த்த....அரசு.......,
வாடிக்கையாய்........நிவாரணம்......!
எத்தனை...லட்சங்கள், கொடுத்தாலும்.....,
திரும்பப்பெறுமா?.....ஒரு குடும்பம்..........,
தன் கணவனையும்.....? தன் தகப்பனையும்.....?
எண்ணிப்பாருங்கள்.....,உயிர்மதிப்பை.......,
யார் மாண்டாலும்......,யார் ஆண்டாலும்.....,
முடிவு......மட்டும்......என்னவோ............? (கேள்விக்குறியாகவே)
பேசிக்கொள்ளுங்கள்......அரசே........!
உயிர்க்கொல்லாவாறு.....இனியாவது.....இல்லாவாறு!