என் நட்பே

அன்பையும் ; பண்பையும் ;
அறிவையும்; அழகையும் ;
குணத்தையும் ; நிறத்தையும்;
மாளிகையையும் ; குடிசையையும்;
கருணையையும் ; இரக்கத்தையும்;
பணத்தையும் ; பதவியையும்;
பாராட்டையும் ; இழிவையும்;
மழலைப் பேச்சையும்;
பார்வையையும்
கண்டுணர்ந்த பல நட்புக்களுக்கு
மத்தியில்.......
என் தமிழைப்
பார்த்து;உணர்ந்து ;
எனக்குக் கிடைத்த முதல் நட்பு நீ!
நன்றி சொல்ல
வார்த்தை இல்லை...
ஆனால்,
நல்ல தோழியாக
நான் இருப்பேன்!!!!
வாழ்நாள் முழுவதும்......

எழுதியவர் : பானுமதி (17-Nov-17, 9:41 am)
சேர்த்தது : மதி
பார்வை : 1172

மேலே