முற்றில்லாப் புள்ளிகள்

ஒரு புள்ளியை வைத்து விட்டு
கருத்து கேட்டான் எவனோ ஒருவன் !
புள்ளியை புள்ளிகளாக்கினேன்
புள்ளிகளை வரிகளாக்கினேன்
வரிகளில் வார்த்தைகளை வைத்தேன்
கவிதை ஆனது !
கவிதையில் சிலர் உள்ளத்தை வைத்தனர்
ரசிகர்கள் ஆயினர் !
கவிதைக்கும் ரசனைக்கும் முற்றுப்புள்ளி ஏது ?