காதல்

1.முத்தம் :
என் முத்தங்களைச் சேமித்து வைக்கும்
ரோஜா இதழ்கள் உன் உதடுகள் !!!

உன் வீட்டு ஜன்னலில் இருந்து
நீ எனக்கு காற்றில் அனுப்பிய
முத்தங்களை எல்லாம்
தவறாமல் சேர்த்து வந்தேன்....
தவறிய முத்தங்கள் எல்லாம்
வானத்தை அடைந்து
மாறியது வானவில்லாக.................
2.உதடு :
உன் உதட்டு சாயத்தை தொட்டு
வானத்தில் பூசினேன் -
வானம் வெட்கப்பட்டு மாறியது
வானவில்லாக..............
3.பிறந்தநாள் :
பிரம்மனின் கற்பனைகள் முழுவதையும்
கொள்ளையடித்த கன்னியே!
உன் பிறந்தநாள் – அவன்
கற்பனைகள் தொலைந்த நாள்..!!!
4.வானவில் விழியழகு :
உன் மை தீட்டிய
விழியழகை ரசித்த பின்னால்
பல வண்ணம் காட்டுகிற
வானவில்லும் எனக்கு
வெறும் கறுப்புக்கோடு தான்!

5.கொலுசு :
உன் சிரிப்பொலியை
எப்போடியோ பதிவுசெய்து வைத்துகொண்டு
அதை அப்படியே ஒலிபரப்பு செய்கின்றன
உன் பாதக்கொலுசுகள்...............
6.உன் வெட்கம் :
உன் விழிகள் பேசும் வார்த்தைகளுக்கு
அர்த்தம் புரியாமல் தவித்த எனக்கு
இதற்கு பெயர் தான் காதல் என்று
உணரவைத்தது உன் வெட்கம்..............

உன்னிடம் காதலை சொல்ல வந்தேன்.....
உன் வெட்கத்தைப் பார்த்து
வெளிவரவில்லை என் காதல்
வெட்கப்பட்டு..................
7.நட்சத்திரங்கள் :
உன் அழகை வர்ணிக்க வார்த்தைகளைத் தேடி
வார்த்தைகள் கிடைக்காமல் - நான்
அடைந்த தோல்விகளை எல்லாம்
வானத்தில் குறித்துவைத்தேன்
நட்சத்திரங்களாய்............
8.பேசும் வார்த்தைகள் :
என் காதலை மேலும் மேலும்
அழகாய் மாற்றுகின்றன – அவள்
தினம் தினம் என்னுடன்
பேசும் வார்த்தைகள்.................
9.பொய் :
காதல் அழிவதில்லையாம்....
அது பொய்
அழிந்துவிட்டது என் தாய் மீதான காதல்
உன்னை பார்த்தவுடன்.................


10.மச்சம் :
அவளை படைத்தவுடன் அழகிலே மயங்கிய பிரம்மன்
பூமியில் யார்கண்ணும் பட்டுவிடகூடாது என்று
திருஷ்டிக்காக மை வைத்து அனுப்பிவிட்டான்
மச்சமாக................


11.தேவதை :
தொலைந்துபோன
ஒரு தேவதையை கண்டுபிடிக்க
கடவுள் என்னை பூமிக்கு அனுப்பினான்
நான் என் தேடலை முடித்துக்கொண்டேன்
உன்னை பார்த்தவுடன்...!!!
12.இதயம் :
நான்கு அறைகள் கொண்ட
இருள் சூழ்ந்த வீட்டில்
தனிமையில் வாழ்கிறாள்
அவள்என் இதயத்தில்.

எழுதியவர் : பிரவீன் (19-Nov-17, 4:52 pm)
சேர்த்தது : Praveen
Tanglish : kaadhal
பார்வை : 323

மேலே