தாயானேன்

நேற்று வரை கருவிலிருந்தாய்
இன்று முதல் மடியிலிருப்பாய்

இதுவரை எனில் உறைந்திருந்திருந்தாய்
இனி எனில் உணர்வாயிருப்பாய்

உன் சிரிப்பே போதுமடி
என் சோகங்கள் கரைத்திட
உன் விழிகள் போதுமடி
என் விழிகள் பார்த்திட

உன் பிஞ்சுவிரல் போதுமே
என் கனங்கள் பஞ்சாகிட
உன் பொக்கைவாய் போதுமடி
என்னை சொக்கிப் போட்டிட

உன் விழிஅசைவுகள் போதுமே
என் இதயத்துடிப்புகள் நடனமாடிட
உன் கொலுசொலி போதுமே
என் இசையோசைகள் சங்கீதமாகிட

நீ மட்டும் போதுமே
என்னை அன்னை ஆக்கிட
நீ தான் வந்தாயே
என்னை அம்மா என்று கூப்பிட
நீ தான் தந்திட்டியாய்
என்னில் அமுதங்கள் சுரந்திட

நீ தான் பதித்தாய்
என்னில் முத்தத்தின் ஈரங்கள்
நான் தான் புதிதாய்
அன்னையாகவும் குழந்தையாகவும்
நாம் தான் புனிதமான
தாய்மை பந்தத்துக்குள் தளிராய்
நீ தான் பூவாய்
மழலை என்னும் மலராய்
நான் தான் வேராய்
வளையும் ஒரு தாயானேன்

எழுதியவர் : யாழினி வளன் (20-Nov-17, 2:42 am)
சேர்த்தது : யாழினி வளன்
Tanglish : thaayanen
பார்வை : 297
மேலே