அழகிய கவிதையே
அழகான கவிதை போல் வந்தவளே ,
ஆழ்மனதில் ஆழமாய் பதிந்துவிட்டாய்.
வேண்டாம் என்று நினைத்தும்
விட்டு செல்ல மறுத்துவிட்டால்.
உன் ஓரக்கண்ணில் நான் ஆயிரம் கவிதைகள்
படித்து புலைவனானேன்.
எழுத்துக்கள் போலும் பொறாமை
படுகிறது என் புலைமையில்.
நான் ஒப்புக்கொள்க்குறேன்!
பிரம்மனே நீ படைப்பில்,
வல்லவனென்று,
என் கற்பனைகளேயும் கடந்து,
இப்படி ஒரு பெண்ணை
படைத்த நீ திறமைசாலி என்று .