கம்பன் கண்ட மங்கை
ஆருயிரே , பால்வண்ண சிலையே , தேன் கொண்ட பூவே
உவப்போடு உனை நோக்க திகைப்பூட்டும் செந்தமிழ் கவிதை அருவியாய் பாயுது
மாதுளைப்பூவும் மஞ்சளும் தேனுடன் கலந்து குவளைப்பூவில் குழைந்து பூசிய கன்னங்களை வண்டுகள் தேனெடுக்க தேடி வரும் , மலர்மயக்கத்தில் காதல் கொள்ளும்.
உன் தேகம் தாங்கிய பாகங்களில் மோகம் கொண்ட மேகங்கள் மெல்ல உருகுகையில் ; வீழ்ந்திடும் விசும்பின் துளிகளால் தாகம் தீர்த்த தேவதை ஆனாய்
மயில் தோகையில் நெய்திட்ட கூந்தலிலே மலர்மாலைகள் சூடிய மங்கைவள் மழைமேகங்கள் சொரிந்திடும் பாலினிலே மணிமாலைகள் அணிந்தவள் மூழ்கிடுவாள்
விண்மீன்கள் ஆக்கிய விழிமீன்கள் அணையாத அகல்விளக்காய் ஆதவனை மிஞ்சிடும்.
வில்வளை புருவமது எய்திடும் கணைகள் ஆடவரை வீழ்த்தி அற்புதம் செய்யும் .