பிறகெதுவுமில்லை

சில பாதைகள்
சில பயணங்கள்
காட்சிகள் விலகியோடின

சிலர் வந்தார்
சிலர் போனார்
நடுவில் சிலர்
நண்பர்கள்

சில நேரங்களில்
சில மனிதர்கள்
முகமூடிகள்
கைகொட்டிச்
சிரித்தன

கொஞ்சம் நட்பு
கொஞ்சம் பகை
எஞ்சியவை
துரோகங்கள்

கொஞ்சம் ஆசை
கொஞ்சம் கனவு
கையறு நிலை
கையருகில்

கொஞசம் வரவு
நிறையப் பற்று
இடையே
வயிறு பசித்தது

கொஞ்சம் பெண்கள்
கொஞ்சம் காதல்
கொஞ்சியது
ரணங்கள்

கொஞ்சம் காமம்
அதில் உச்சம்
இடையில்
புணர்ந்திருந்தோம்

கொஞ்சம் இன்பம்
நிறையத் துன்பம்
இடையில்தான்
வாழ்க்கை

கொஞ்சம் கருணை
நிறையக் கோபம்
தேவதைகளுக்கு
சிறகுகள்
ஆசீர்வதிக்கப்படவில்லை

ஒரே ஜனனம்
ஒரே மரணம்
பிறகு
வேறெதுவுமில்லை ...

எழுதியவர் : முகிலன் (20-Nov-17, 8:56 pm)
சேர்த்தது : முகிலன்
பார்வை : 104

மேலே