தமிழ்ப்படுகொலை குற்றவாளி தமிழன் மட்டுமே

ஆங்கிலத்தை வளர்த்துக்கொண்டால் வாழ்வில் முன்னேறலாம் என்று... தமிழை தொலைத்து வருகிறோம்..

தான் தமிழை வரலாற்றிலிருந்து அழித்தது போதாதென்று தன் வாரிசுகளையும் அனுப்பி வைக்கின்றனர் இன்றைய படித்த

தம்பதிகள்..
ஆசிரியர்களும் கூட...

ஆங்கிலம் தெரிந்தால் பெரிய அறிவாளியாய் சித்தரிக்கிறது இன்றைய நாகரிகம்.

கற்போம்,
கற்றுக்கொண்டே இருப்போம்,
கற்பித்தும் கொடுப்போம் ,
கற்கவும் சொல்வோம்
கடைசிவரை ஆங்கிலத்தையே...

ஒரு நாள்...
உன் தாய்மொழி எது?
அதற்கு அடையாளம் ஏது?
உன் வரலாறு எது?
அதற்கு சான்றுகள் ஏது?
உன் பிறப்பிடம் எது?
அதற்கு வரைபடம்தான் ஏது?

இந்த கேள்விகளுக்கெல்லாம்
விடை தெரியாமல்...

எடுத்து சொல்லவும்
வழி புரியாமல் ..

கூகிளில் கூட
குறிப்பு இல்லாமல்..

இன்று சுவடிகளில் இருக்கும்
உன் வரலாறு இருந்த
சுவடுகளே இல்லாமல்... போகும்

ஆங்கில மோகம் உன்னை முழுவதும் ஆக்கிரமித்து..
உன் மொழியை முற்றிலுமாக அழித்து..
தானே இவ்வுலகின் தலைசிறந்த மொழியென மார்தட்டி ஆர்ப்பரிக்கும்..

நீ ஆங்கிலத்தை
அறிவென
ஊட்டி வளர்த்த
உன் சந்ததிகளுக்கு அகதிகளென்று
பெயர்சூட்டும்

இன்று
எம் தமிழ் மொழியே தலையாயதென்று
தலையில் தூக்கி வைத்து கர்வத்தோடு கத்தி சொல்லும் கடைசி தலைமுறை இந்நூற்றாண்டோடு
முடிந்துபோகும்


அது வரை ஆங்கிலத்தையே கற்போம்.. கற்பிப்போம்....

எழுதியவர் : தமிழரண் (20-Nov-17, 10:25 pm)
பார்வை : 230

மேலே