மாய்ந்துபோவேன் நான்

சிலிர்ப்பூட்டும் கவி சீறியே
பிறக்குதடி.......

நின் சிந்தனைகள் எனை நிந்தனை
செய்யுதடி.......

வந்த பிணியெலாம் வாசல் பார்த்து ஓடுதடி.......

நின் வாசம் எனை வசப்பட வைக்குதடி......

காந்தார கலையெலாம் நின்
கண்ணிலே தெரியுதடி......

வந்தார் போவாரையெலாம்
வம்புக்கு அழைக்குதடி......

மாந்தர் குலமெலாம் மதிகெட்டு
திரியுதடி.......

சாந்தம் தனைதேடி சாகத்தான் போகுதடி......

காந்தள் மலரெலாம் கைகூப்பி
நிக்குதடி......

ஏந்திழையே உனை ஏற்றம் புரியுதடி.....

சாய்ந்து நீ தோளில் சிரம்
தாழ்ந்தால் போதுமடி......

மாய்ந்து நான் போவேன்
இம்மையும் எழுமையடி....

எழுதியவர் : (21-Nov-17, 1:29 pm)
சேர்த்தது : விமுகா
பார்வை : 118

மேலே