குயில் கூடு

குயில் கூடு

ஆலிலை தோட்டத்து
தாமரை குளத்தின்
நெல்லிமணி சோலையின்
புன்னைமர கிளையில்
ஓா் குயில் கூடு உள்ளது
கூட்டினுள் ஓா் குயில் குஞ்சும் உள்ளது

விழிகள் திறக்காத
அவன் இமைகதவுகள்
குரல்கள் இசைக்காத
அவன் வாய்மொழிகள்
நகங்கள் வளராத
அவன் கால்விரல்கள்
வெண்மையும் மஞ்சளும் சேரும்
அவன் உடல்நிறங்கள்
இதுவே தம் உயிரென கொஞ்சும்
தாய்குயிலும் உள்ளது

காா்த்திகை பௌர்ணமியில்
அவன் கண்கள் திறக்க
காாிருள் நேரத்தில்
அவன் கால்கள் மிதிக்க
ஆனந்த நெஞ்சத்தில்
தாயும் அவனை அணைக்க
நாட்களும் கொஞ்சம்
நடமாடியது.....

பனிவிழும் மாா்கழி
கூட்டினுள் எட்டிப்பாா்திட
பால்நிலா குஞ்சும்
குளிர்ச்சியில் நடுங்கிட
தாயன்பு உள்ளம்
கூட்டை நிறைக்க
நெல்லாடைகள் தேடி அலைந்தது

துருவங்கள் தாண்டி
வயல்கள் கண்டு
வைக்கோல் எடுத்து
நாவை நிறைத்து
கூட்டை நோக்கி
பறந்துச் சென்றது

கூட்டைச் சேரும் அருகில்
தம் விழிகள் கூட்டைத் தேடிட
அங்கு கூடும் இல்லை
கூடிருந்த மரமும் இல்லை
என உணர்ந்தது

படபடத்த நெஞ்சுடன்
அக்கம் பக்கம் தேட
துடிதுடித்த மனதுடன்
தாமரை குளத்தை பாாக்க
அங்கு பிஞ்சு குஞ்சின் உடல்
தஞ்சம் கொண்ட
தண்ணீர் மீது மிதந்ததை
கண்டது

புன்னைமர கிளையை
பூலோக மனிதர் வெட்ட
தன்னந்தனியே நம் குஞ்சும்
தாமரை குளத்தில்
விழுந்தததென உணர்ந்து கதறியது........
- சஜு

எழுதியவர் : சஜு (21-Nov-17, 9:33 pm)
சேர்த்தது : சஜூ
Tanglish : kuil koodu
பார்வை : 154

மேலே