என் எண்ணம்
என் வானம்
ஒருநாள் விடியும்!
என்னால்
எதுவும் முடியும்!
வெற்றிகள் எனை
வந்து சேரும்!
வியப்பாய் பார்ப்பர்
யாரும்!
என் தந்தையின்
அருளால் நானும்!
தலைநிமிர
வாழ்வேன் நாளும்!
என் மனம் கவர்ந்த
பெண்ணும்!
என்னுடன் இருப்பாள்
என்றும்!
உற்றார் நோகாத வண்ணம்!
மணவிழா காண்பதே
என் எண்ணம்!!!

