நீ எங்கே உள்ளாய் கருநீளவண்ணனே

என்னை மறந்தேனே
உன்னைக் கண்டவுடன்.
நான் உருகினேன்
உனக்காகவே.
என் உதிரத்தை தூரிகை ஆக்கினேன்
மனதில் உன்னை ஓவியமாய் தீட்டினேன்
உன்னை கேட்காமல்.
ஆயிரம் கேள்விகள் கேட்டேன்
நீ யாரென்று?
உருவம் நோக்கினேன்
உன் விலாசம் அறியாமல் .
அகத்தே நேசித்தேன்
புறத்தே புறம்தள்ளி.
என் கருவிழியில் நிற்கும் மாயக்கண்ணனே
எங்கு தான் உள்ளாயோ?
எதற்காக என்னுள் நுழைந்தாயோ ?
என்னை அறிய முயலாமல்
உன்னை அறிய முயற்சிக்கின்றேன்
ஏனோ தெரியவில்லை.
உன்னை பார்க்க எதிர்நோக்கினேன்
நீ எங்கு இருக்கின்றாய் என்று தெரியாமல் .
எங்கு தான் உள்ளாய் கருநீளவண்ணனே

எழுதியவர் : பிரகதி (21-Nov-17, 9:33 pm)
சேர்த்தது : அரும்பிசை
Tanglish : nee engae ullaai
பார்வை : 466

மேலே