காற்று மாசுபடுதல்

காற்று வெளி மாசுபாடு என்பது வளிமண்டல பகுதியில் ஏற்படும் சீர் குலைவின் அறிகுறியாகும். இதன் சுருக்கம் பின்வருமாறு :


வளிமண்டலத்தில் அதிகமாக வெளியேற்றப்படும் வாயுக்கள்
வேதிப் பொருட்களின் செறிவு நிலை
பல்வேறு / வெவ்வேறு நடவடிக்கைகள் மூலம் சிதறும் / வீணாகும் தன்மையானது உட்கொள்ளும் தன்மையை விட குறைவாகவே உள்ளது (கார்பன் மற்றும் நைட்ரஜன் சுழற்சி)
புதிய வேதி வினையின் எதிர் செயல் மற்றும் உயிர் சிதைவற்ற பிரிவின் தோற்றம்
உலக வெப்பமயமாதல் அமில் மழை, புகை மூட்டப்பனி, ஓசோன் செறிதளர்வு போன்றவை காற்று வெளி மாசுபாட்டின் தாக்கமாகும்.

நம் தினசரி வாழ்க்கையுடன் கார்பன் மற்றும் நைட்ரஜன் சுழற்சியானது தொடர்புடையதாகும். இந்த இரண்டு சுழற்சியும் மிக முக்கியமானதாகும். இவை நம் பூமியில் கார்பன் மற்றும் நைட்ரஜன் போன்றவற்றின் தொகுப்பினை ஒழுங்குபடுத்துகிறது.

ஆதாரங்கள் மற்றும் முறைகள்
முக்கிய ஆதாரங்கள் கீழ்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளது.



மோட்டார் வாகனத்தின் புகை
வெப்பம் மற்றும் மின் உற்பத்தி வசதிகள்
தொழிற்சாலை இயக்கமுறை
வாகன தயாரிப்பு
உரங்களின் தொகுதி
கட்டிடத் தகர்ப்பு
திடக் கழிவு மாசுபாடு
திரவத்தின் நீராவி
எரிமலை குழம்பு
எரி பொருள் உற்பத்தி
சாலை கட்டமைப்பு
மின்சார உறுப்பு உற்பத்தி
உலோகம் பிரித்தெடுத்தல்
காட்டுத் தீ
வேளாண்மை

காற்று வளி மாசுபாட்டினால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவு :


இந்த மாசுபாட்டினால் மனிதர்களில் உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும், நடத்தையிலும் சீர்குலைவு ஏற்படுகிறது
நுரையீரல் செயல்பாட்டை குறைத்தல்
கண்கள், மூக்கு, வாய் மற்றும் தொண்டையில் எரிச்சல்
ஆஸ்த்மா (அ) மூச்சிரைப்பு நோய் வருதல்
இருமல் மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட நோய்களின் அறிகுறிகள்

காற்று வெளி மாசுபாடு



சுவாச மண்டலத்தின் நோயான மார்பு சளியை அதிகரித்தல்
செயற்திறனின் அளவினை குறைத்தல்
தலைவலி மற்றும் தலைச்சுற்றல்
அகச்சுரப்பித் தொகுதி, இனப்பெருக்கத்தொகுதி மற்றும் நோய்எதிர்ப்பாற்றல் முறைமையை பாதித்தல்
நரம்பு நடத்தையில் பாதிப்பு
இரத்த நாடியில் பாதிப்பு
புற்றுநோய்
முதிர்ச்சியற்ற இறப்பு

காற்று வளி மாசுபாட்டினால் விலங்குகளுக்கு ஏற்படும் விளைவு :

ஏரிகள் மற்றும் ஓடைகளில் வாழும் மீன்கள் அமில மழையினால் பாதிக்கப்பட்டு சுவாசிக்க வழியில்லாமல் இறக்கின்றது.
காற்று மாசுபாட்டினால் வளிமண்டல ஓசோன் படலத்தின் மேல் படலத்தில் தாக்கம் ஏற்படும் அதிகப்படியான புறஊதாக்கதிர்கள் சூரியனிடமிருந்து புவிக்கு வருவதால் உலகளவில் தோல் புற்றுநோய் ஏற்படுகிறது
ஓசோனின் கீழ் படலத்தில் சீர்குலைவு ஏற்படும் போது விலங்குகளின் நுரையீரல் திசுவானது பாதிக்கப்படுகிறது.

காற்று மாசுபடுதலினால் மரங்கள் மற்றும் தாவரங்களில் ஏற்படும் விளைவுகள் :



அமில மழையினால் மரங்கள் அழிந்து தாவரங்களின் இலைகள் அழிந்து மற்றும் மண்ணினை உரங்கள் மற்றும் வளர்ச்சிக்கு உகந்தற்றதாக மாற்றுகிறது

ஓசோன் படலத்தில் ஏற்படும் ஓட்டையினால் சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகரித்து மரங்கள் மற்றும் தாவரங்கள் அழிந்துவிடுகின்றது

ஓசோனின் கீழ் படலம் பாதிக்கப்படுவதால் தாவரங்களில் சுவாசம் தடைசெய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் தாவரங்களின் ஒளிச்சேர்க்கையை தாக்குதலால், தாவரங்களின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. மேலும் இவை தாவரங்களின் திசுக்களை நேரடியாக அழிக்கிறது

எழுதியவர் : (23-Nov-17, 3:20 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 9439

சிறந்த கட்டுரைகள்

மேலே