தண்ணீரை பாதுகாப்போம்

வீட்டில் நீரை சேமித்து பாதுகாத்தல் -


நீர்க்குழாய்களில் நீர்க்கசிவுகள் உள்ளதா என்பதை சரிபாருங்கள். நீர்கசியும் குழாய்கள் நீரை விரயமாக்கும்.

நீரை பாதுகாக்கும் சாதனங்களை நீர்க்குழாய்களிலும், மலசலகூடங்களிலும் பொருத்துங்கள். குறைந்தளவு நீரை பாய்ச்சும் ஷவர்ஹெட் சாதனத்திலிருந்து இதனை ஆரம்பியுங்கள்.

நீரை திறந்துவிட்டபடியே சமையல் பாத்திரங்களை சுத்தம் செய்யாதீர்கள். குறைந்தளவு நீரில் அதிக பாத்திரங்களை சுத்தம் செய்யும் வழிமுறையை பின்பற்றுங்கள்.

சலவை இயந்திரத்தின் பாவனை முடிந்தவுடன், நீர்க்குழாய் திருகியை மூடிவிடுங்கள். இது நீர்க்கசிவினைத் தடுக்கும். சலவை இயந்திரத்திற்கான நீர்க்குழாய் எப்போதும் திறந்த நிலையில் இருக்கத் தேவையில்லை.

பழைய மலசலகூடங்களை அகற்றி, குறைந்தளவு நீரை பயன்படுத்தும் நவீன மலசலகூட சாதனங்களைப் பொருத்துங்கள்.

சலவை இயந்திரத்தின் முழுமையளவு துணிகளை கழுவுங்கள்.
அரைவாசியளவு துணி துவைத்தல், நீர் விரயத்தை உண்டாக்கும்.

உங்கள் தோட்டத்திற்கு நீர்பாய்ச்சுவதற்கென அதிகளவு தண்ணீரை உபயோகிக்காதீர்கள்.

பற்கள் துலக்கும் போது நீர்க்குழாயை திறந்துவிடாதீர்கள்.

அதிகளவு இரசாயனப் பொருட்களை உபயோகிக்காதீர்கள் -

பாதிப்பு ஏற்படுத்தும் இரசாயனங்கள் அற்ற, வேறு வீடு தூய்மையாக்கிகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள். உதாரணமாக: அரைப் பங்கு வெள்ளை வினாகிரி மற்றும் அரைப்பங்கு தண்ணீர் ஆகியன சாதாரண துப்புரவாக்கும் பணியை, வர்த்தக தூய்மையாக்கிகளை போன்றே மேற்கொள்ளக்கூடியது. பேக்கிங் சோடா, உப்பு போன்றவையும் நச்சுத்தன்மையற்ற துப்புரவாக்கிகளாகும்.

நச்சுத்தன்மையற்ற துப்புரவாக்கிகளுக்கான மாற்று கிடைக்காத நிலையில், குறைந்த செலவில் செயற்திறனும், சிறந்த துப்புரவாக்கும் திறனும் கொண்டதான தூய்மையாக்கிகளை உபயோகியுங்கள்.

பூச்சிகொல்லிகள் மற்றும் களை கொல்லிகளுக்கு பதிலாக இயற்கை முறையில் அவற்றினை அழிக்கும் வழிமுறைகளை தெரிந்துகொண்டு, அதனைப் பயன்படுத்துங்கள்.

இரசாயனக் கழிவுகளை சரியான முறையில் அகற்றுங்கள் –

பெயின்ட், மோட்டார் ஒயில், அமோனியா போன்ற பல்வேறு ரசாயனப்பொருட்களை புற்தரையிலோ, கழிவு வடிகான்களிலோ ஊற்றி அகற்றுவது தவிர்க்கப்பட வேண்டும். அவை நிலத்திற்குள் ஊடுருவி, நிலத்தடி நீர்மட்டத்தில் மாசினை ஏற்படுத்தும். அருகிலுள்ள சுகாதார துறையினரை அணுகி பாதுகாப்பாக கழிவகற்கும் முறைகள் குறித்து அறிந்து அதற்கமைய கழிவகற்றுங்கள்.

நீரை மாசுபடுத்தும் வழிமுறைகளை அறிந்துகொள்ளுங்கள். நீரை பேணும் வழிமுறைகளை மற்றவர்களுடன் இணைந்து முன்னெடுங்கள் –


உங்கள் பிரதேசத்திலுள்ள ஆறு, குளம், கடல் போன்ற நீர் நிலைகளை பேணும் உள்ளுர் சுற்றுச்சூழல் குழுவினருடன் இணைந்து கொள்ளுங்கள்.

கடற்கரைகள் மற்றும் ஆற்று நீர்ப்படுக்கைகளை தன்னார்வ முறையில் இணைந்து சுத்தப்படுத்துங்கள் .

உங்கள் பிரதேசத்திலுள்ள நீர்நிலைகளை சுத்தபபடுத்தும் வகையில் ஏனையவர்களையும் ஈடுபடுத்த முயற்சியுங்கள்.

எழுதியவர் : (23-Nov-17, 3:28 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 8540

மேலே