பொங்கல் திருநாளை தமிழர் திருநாள் என கொண்டதுவதன் காரணம்

ஒவ்வொரு பண்டிகைகளுக்கு பின்னணியிலும் சுவாரசியமான புராணக் கதைகள் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொங்கல் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன? ஆம், தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட பண்டிகை வந்துவிட்டது. பொங்கல் என்றாலே சந்தோஷம் தான். இருக்காத என்ன? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடி மகிழும் தமிழர் பண்டிகையல்லவா?

பொங்கல் என்றாலே குழந்தைகளுக்கு ஞாபகத்தில் வருவது சர்க்கரைப் பொங்கல், கரும்பு, புத்தாடை, முக்கியமாக விடுமுறை. பெரியவர்களுக்கு, முக்கியமாக விவசாயிகளுக்கு, அது தங்கள் வாழ்வாதாரத்தைப் போற்றி, சூரிய கடவுளுக்கு நன்றி செலுத்தும் பண்டிகையாகும். போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், உழவர் திருநாள் என வரிசையாக பல பண்டிகைகளை கொண்டுள்ளது இது.

அனைத்து வீடுகளும் வெள்ளையடிக்கப்பட்டு மிகவும் சிறப்பான முறையில் பட்டிதொட்டியெங்கும் கொண்டாடப்படும் பண்டிகை இது. சரி, இந்த பண்டிகைக்கு பின்னணியில் புராண கதைகள் இல்லையா என நீங்கள் கேட்பது புரிகிறது. இல்லாமலா என்ன? இந்த பண்டிகைக்கு பின்னணியிலும் சில புராண கதைகள் உள்ளது. அவைகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

புராண அம்சம் கொண்ட கோவர்தன மலை

முதல் நாள் கொண்டாடப்படும் பண்டிகையான போகிக்கும் இந்திர தேவன் (மேகம் மற்றும் மழையின் கடவுள்) மற்றும் கிருஷ்ணா பகவானுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

முன்னதாக, தெய்வங்களின் அரசனாக விளங்கும் இந்திர தேவனை மக்கள் வணங்கி வந்தனர். இந்திரனுக்கு கொடுக்கப்பட்டு வந்த இந்த மரியாதை அவருக்குள் கர்வத்தையும், ஆணவத்தையும் அதிகரிக்க செய்தது. மற்றவர்களை காட்டிலும் தான் தான் மிகவும் சக்தி வாய்ந்தவராக அவர் கருதினார். குழந்தை கிருஷ்ணருக்கு இது தெரிய வந்தவுடன், இந்திர தேவனுக்கு நல்லதொரு பாடம் கற்பிக்க விரும்பினார்.

பாடம் கற்பித்த கிருஷ்ணன்

கிருஷ்ணன் தன்னுடைய ஆடு மேய்க்கும் நண்பர்களை கோவர்தன மலையை வணங்க தூண்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த இந்திர தேவன் இடைவிடாத இடி, மின்னல், பலமான மழை மற்றும் வெள்ளத்தை உருவாக்க மேகங்களை அனுப்பினார்.

அந்த புராணத்தின் படி, ஆடு மேய்ப்பவர்களையும், ஆடுகளையும் பாதுகாக்க, மிகப்பெரிய கோவர்தன மலையை தன் சிறிய கைகளில் தூக்கினார். இந்திர தேவன் உருவாக்கிய புயலில் இருந்து அனைவரையும் காக்க அந்த மலையை தூக்கி சுமந்தபடியே நின்றார் கிருஷ்ணர். 3 நாட்களுக்கு நீடித்தது அந்த மழை. அதன் பின் தன் தவறையும் கிருஷ்ணரின் தெய்வீக சக்தியையும் உணர்ந்து கொண்டார் இந்திர தேவன்.

மன்னிப்பு கோரிய இந்திரன்

பணிவுடன் இருப்பதாக வாக்களித்த இந்திர தேவன், கிருஷ்ணரின் மன்னிப்பை கோரினார். அன்று முதல், இந்திரனை கௌரவிக்கும் வகையில் போகி பண்டிகையை கொண்டாட கிருஷ்ணர் அனுமதித்தார்.

இதுவே பொங்கல் கொண்டாட்டத்திற்கு விதையாக அமைந்தது. இந்த பண்டிகை இந்திரனின் மற்றொரு பெயரை பெற்று புராணக்கதையாக மாறியுள்ளது.

சிவபெருமான் பற்றிய புராணக்கதை

பொங்கல் பண்டிகையுடன் தொடர்புடைய மற்றொரு புராணக்கதையும் உள்ளது. அது சிவபெருமான் சம்பந்தப்பட்டது. பொங்கலுக்கு மூன்றாவது நாளான மாட்டுப்பொங்கல் என்பது, சிவபெருமானும் அவருடைய வாகனமான நந்தியும் சம்பந்தப்பட்டதாகும்.

புராண கதையின் படி, ஒரு முறை நந்தியிடம் பூமிக்கு செல்லுமாறு சிவபெருமான் கேட்டுள்ளார். தவறாக சொல்லிய நந்தி தினமும் எண்ணெய் மசாஜ் செய்த பிறகு குளித்து, மாதம் ஒரு முறை மட்டும் உண்ணுமாறு அங்கே இருக்கும் மக்களிடம் தான் கூறச் சொன்னதாக நந்தியை கூற சொன்னார். ஆனால் நந்தியோ மாதமுறை எண்ணெய் மசாஜ் செய்து குளித்து, தினமும் உண்ணுமாறு தவறாக கூறி விட்டது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் நந்தியை சபித்தார். அது செய்த தவறினால் இனி பூமியில் நெற்பயிர்களுக்கு பஞ்சம் ஏற்படும் என கூறினார். இனி அது என்றுமே பூமியில் வாழ்ந்து, மக்களுக்கு அவர்களின் நிலத்தை உழுது கொடுக்க வேண்டும் என அவர் சாபமளித்தார். அதனால் தான் மாட்டுப் பொங்கலுடன் மாடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

எழுதியவர் : (23-Nov-17, 4:30 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 17566

சிறந்த கட்டுரைகள்

மேலே