கல்வியே சிறந்தது

இன்றய உலகின் இன்றியமையாத ஒன்றாக திகழ்வது யாதெனில் கல்வியே ஆகும். எந்தவொரு சமூகத்தினரும் இக்கல்வியைக் கற்பதிலிருந்து விலகிச் செல்வது இன்ரைய நவீன உலகில் மிகவும் அரிதாக காணப் படுகிறது. ஏனெனில் கல்வியின் சிறப்பை அனைத்து சமூகங்களும் புரிந்துள்ளன. இதனால் தான் இன்று கல்வியானது மனிதனின் அத்தியவசிய தேவையாக இருக்கிறது.

கல்வியின் சிறப்பு பற்றி கூறும்போது கல்வி கற்றவன் எந்த இடத்திற்க்குச் சென்றாலும் அவன் பிற சமூகத்தால் மதிக்கப் படுகின்றான். இதற்க்கு காரணம் அவன் கற்ற கல்வியே

கற்றவனுக்கு தனது நாடும் ஊருமே அல்லாமல் எந்த நாடும் ஊரும் தன்னுடைய ஊராகும்.இப்படி கல்வி கற்றவனின் சிறப்பு இருக்க ஒருவன் தான் மரணிக்கும் வரைகல்வி கற்க்காமல் இருந்து தனது காலத்தை கழிப்பது மிகவும் சிரமமானதாகும். இதனையே திருவள்ளுவர் மிகவும் அழகாக வர்ணித்திருக்கிறார்.

*யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன்
சாந்துணையும் கல்லாதவாறு* என்று குறிப்பிடுகிறார்.

ஒருவன் தான் எவ்வளவு கல்வி கற்றாலும் அதனை செயல் வடிவில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவன் கற்ற கல்வியின் பயன் அவனுக்கு கிடைக்கும். இல்லாவிடில் அவன் கற்ற கல்வியின் பயன் ஒன்றும் இல்லாமல் போய்விடும். இதனையும் திருவள்ளுவர் தனது திருக்குறளின் கல்வி என்ற அதிகாரத்தின் முதலாவது குறளில் தெளிவாக கூறுகின்றார்.

*கற்க கசடறக் கற்பவை கற்ற பின்
நிற்க அதற்குத் தக* என்று கூறுவதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

எண் என்று சொல்லப்படுவதும், எழுத்து என்று சொல்லப்படுவதும் இவை இரண்டினையும் அறிந்தோர் சிறப்பு மிக்க மக்களின் உயிர்களுக்கு கண் என்று சொல்லப் படுவர். இந்த அளவிற்க்கு கல்வியின் சிறப்பு எடுத்துரைக்கப் படுகின்றது.

*கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு
புண்ணுடையர் கல்லாதவர்*

கற்றவரின் சிறப்புப் பற்றி கூறும் போது ஒருவனின் முகத்திலுள்ள கண்ணானது கற்றவருக்குரிய அடையாளம் என்று சொல்லப்படுகிற்து. அதே கண் இல்லாதவருக்கு முகத்தில் இரண்டு புண் இருப்பதாக குறிப்பிடப் படுகின்றது. இதன் மூலம் கல்வியின் சிறப்பும் அதனைக் கற்றவனின் சிறப்பும் கூறப்படுகின்றது.

கல்வி உடையவர் எல்லா மக்களிடமும் நன்றாக பழகிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அவர்களுடன் சந்தோசமாக சேர்ந்து வாழ்வதையே விரும்புவர். இவர்களை பிரிக்கின்ற போது இனி நாம் எப்போது நான் மீண்டும் சேர்வோம்! என்ற நினைவிலேயே பிரிகின்ற தன்மை கற்றவரிடம் இருக்கும் தன்மையாகும்.

மனிதன் அயுள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்க மறுப்பவன் வாழ மறுப்பவன் ஆகின்றான். கல்வி என்பது ஆய்வு கல்வி மூலம் சூழலை அறிவை சமூகத்தை பண்பாடு மறபை ஆராய்ந்து கொள்ளலாம்.

*கல்விக்காக உயிர் கொடுத்தோர் என்றும்
மரணிப்பதில்லை*

மேற்கூரிய வாசகத்தை ஆராய்ந்த போது கற்றவனின் சிறப்பை கணலாம். அதாவது இக்கல்விக்காக உயிர் கொடுத்தோர் மரணிப்பதில்லை. என்பது கல்வி கற்றவர் மரணித்து விடுவார். ஆனால் அவர் கற்ற, கற்ப்பித்த கல்வி இந்த உலகம் அழியும் வரை இருந்தே ஆகும்.
இதனையே கல்விக்காக உயிர் கொடுத்தோர் மரணிப்பதில்லை எனகூறப்படுகிறது. இதற்க்கு சிறந்த உதாரணம் 1400 வருடங்களுக்கு முன் கற்ப்பித்த புனித இஸ்லாம் மார்க்கம் இன்ரு வரை நடைமுறைப் படுத்த படுகிறது. இதனைப் போதித்தவர் மரணித்து விட்டார். அவர் கற்ப்பித்தவை இன்றும் எம்மத்தியில் காணப்படுவதை காணலாம்.

*தான் இன்புறுவது உலகின் பிறர் கண்டு
காமுருவர் கற்றரிந்தார்.*

ஒருவன் தான் கற்ற கல்வியின் இன்பத்தை உணர்ந்தானாயின் அவன் மீண்டும் கற்பதையே விரும்புவான். இது கல்வியின் பண்பாக கருதப் படுகிறது.

மாந்தர் தம் கற்றனைத்தூரும் அறிவு என்பது வள்ளுவர் கண்ட வாழ்க்கை நெறியாகும். கல்வி மனித அடிப்படை உரிமைகளில் ஒன்று. அறிவியற் கல்வி, சமூக அறிவியற் கல்வி, அழகியல் கல்வி ஆகிய மூன்றும் வாழ்க்கைக்கு அவசியமானவை. ஒருவனுக்கு பெருமையையும் புகழையும் தரக்கூடிய செல்வம் கல்விச் செல்வமே அன்றி வேறில்லை.

கல்வி தொழிலுக்கு வழி காட்டுகிற்து. கல்வி என்பது வாழ்க்கை வாழ்வதற்க்காக உதவும் கருவியாகும். அறிவியலும் சமூகமும் வாழ்நாள் முழுவதும் தொடரும் கருவியாகும். வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை இனங்கண்டு அதற்கேற்ப கற்க வேண்டும். வாழ்க்கையை நெறிப் படுத்தவும் மேம் படுத்தவும் கல்வியை பயன் படுத்த வேண்டும்.

கல்வி கற்றவரிடம் ஒழுக்கம் பண்பு நேர்மை நீதி இவைகள் அனைத்தும் ஒருங்கே அமைந்து காணப்படும். எனவே கல்வியானது ஒரு மனிதனின் முக்கிய தேவையாக இருக்கிறது. எந்தவொரு சமூகமும் கல்வி இல்லாமல் இருப்பது இக்காலத்தைப் பொருத்த வரை மிகவும் தாழ்வாகவும் இழிவாகவும் கருதப் படும்.

எனவே இவ்வாறு பார்க்கும் போது கல்வியின் முக்கியத்துவத்தை அறிய முடிகின்றது. ஒருவன் கல்வி கற்றால் எவ்வாறு சமூகத்தில் மதிக்கப் படுகின்றான் என்பதை விளங்க முடியும் இவ்வாறு கல்வியை கற்று சமூகத்தில் சிறந்ததோர் பிரஜையாக வாழ கல்வி உதவுகின்றது.

எழுதியவர் : (23-Nov-17, 5:51 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 31484

சிறந்த கட்டுரைகள்

மேலே