உயிரின் எல்லை

வாழ்வின் எல்லை அறிந்துகொண்டேன்-உயிர்
பிரியும் சொல்லையும் தெரிந்துகொண்டேன்
மறந்துவிடு என்னும்
ஓர்சொல்லில் தான்-உயிர்
அழிந்துவிடுமென்று
நான் என்னினேன்-உயிர்
பிரிந்த காதலைப் புதைக்கநின்றேன்-மனம்
ஊஞ்சல் தொட்டியில் ஆடிநின்றான்-அதைக்
கண்டு முகத்தை
நான் திருப்பிக் கொண்டேன்-உன்னை
மறந்தால் வாழ்க்கை எதற்கு?
என்றான்...
காதல் கண்ணை மறைப்பதில்லை-அது
வாழ்வில் என்றும் நிலைப்பதில்லை!
காதல் தோல்விக் கசப்பதில்லை-அது
வாழ்வில் என்றும் நடப்பதில்லை!
வெள்ளைக் காகித நூல்வொன்றில்-உன்
நிழலை சேமித்து நான்வைப்பேன்
நூலில் சேமித்த உன் நிழலை-என்
கனவு என்னும் கடலில் சேர்ப்பேன்!!
பிறக்கும் குழந்தை ஓர்குரலில்-தன்
தாயின் இன்பம் வளர்க்குதடி!
தாயும் உடல்வலிப் பொருத்துக்கொண்டு-தன்
குழந்தைப் பசியைப் போக்குமடி!
உடலில் ஒருப்புறம் நீ எனக்கு..
தாயைப் போலவே நான் உனக்கு..
உயிரின் எல்லையைக் கடந்துவிட்டு-வரும்
தாயைப் போலவே நானில்லையே!!!

எழுதியவர் : sahulhameed (23-Nov-17, 7:48 pm)
சேர்த்தது : HSHameed
Tanglish : uyeerin ellai
பார்வை : 400

மேலே