கம்பன் ஏமாந்தான் - புதுவைக் குமார்
இவள் தலையில்
சூடுவதற்கு முன்னால்தான்
அந்தப் பூவின் பெயர் மல்லிகை
இவள் தலைக்குப் பின்னால்
சூடிவிட்டு உதிரும்போது
அதன் பெயரோ மூலிகை
இவளைக்கண்டிருந்தால்
திருவாசகம் எழுதியவர்
இவளின் உருவாசகம் அல்லவா
எழுதியிருப்பார்
கம்பர் கம்ப ராமாயணம் எழுதாது
இவளின் கம்மல் ரம்மியத்தையல்லவா
எழுதியிருப்பார்
தேவாரம் இயற்றியவர்
இந்த ஆவாரத்தைப்பற்றியல்லவா
இயற்றியிருப்பார்
இவளைப் பார்த்துப் பிக்காஸோ
வரைந்த காகிதத்தில் பீக்காக் (மயில்)
அல்லவா தெரிந்தது
அப்போதுதான் அவருக்கே அவள்
மங்கை அல்ல மயிலின்
தங்கை என்பது புரிந்தது
வனவில்லை வளைத்தால்
சீதையைக் கட்டலாம்
வானவில்லை வளைத்தால்கூட
இவளைக் காட்டமுடியுமா
என்பது சந்தேகமே
சூரியனுக்கே சிவப்பை
அள்ளிக்கொடுக்கும் திறனுடையது
இவளின் செந்தேகமே
பஞ்சவர்ணக் கிளிகளெல்லாம்
காட்டில் படுத்துறங்க
இவள் மட்டும் பஞ்சுக்கட்டிலில்
படுத்துறங்கினாள்
இவள் என் கனவுகளை
தேவையின்றி வதை செய்யும்
தேவதை
என் இரு கண்களோ
இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறது
இந்த உமையாள் வீதியில் நடந்து போவதை
இவள் இல்லையென்றால்
எமன்கூட தடுக்கமுடியாது
விதி முடிந்து நான் சாவதை
என் கல்லறையில் எழுதிவையுங்கள்
அன்பே உன் மௌனம்தான்
என்னை மயானத்தில் பேசவைத்து
உன் சொல்லறை மூடியதால்
என்னை செல் அறை மூடியது
உன் பல்லரை காதல் எனும்
வார்தையைத் திறக்காததால்
என் கல்லறை வாசல் திறந்தது
உன் தொண்டைக்குழியின் அமைதி
நான் தோண்டிய குழிக்குள் சமாதி
அன்பே நான் உறங்குவது
கல்லறை இல்லை உன் கருவறை
அழகே என்னைக் காதலிக்கவில்லை
என்றாவது சொல்லடி ஒருமுறை