அரசியல் மேடை

அளவில் பெரிய மேடை அதில்
வெற்றிடம் ஒன்று வந்தது ..
அமர்ந்திருந்த ஆணி வேறோ
அடியோடு சரிந்து விழ
ஆலமரத்தை தூக்கிப்பிடிக்க
கோடாரி உதவி செய்யுது ...
முட்டி மோதி முன்னுக்கு சென்று
மேடையில் அமரும்
போட்டி அணல் பறக்குது ..
முகமூடி கலைந்த முகம்
முன்னுக்கு
பின்னாய் பேசியே
கூட்டத்தில் குழப்பத்தை கலப்புது ...
இதை ரசிக்க வந்த கலைஞனை
பேசி பேசி உசுப்பேற்றி
களத்தில் அவனை
ஓடச்செய்த மாயையும்
விந்தை அடைய செய்யுது ...
சக்திக்கொண்ட படையொன்று
பாய்ந்து மேடை அடைந்திட
தளபதி ஏற்று பறக்கவே ,
முட்டுக்கட்டை போட்டு ஏனோ
மத்தியிலே தடுக்குது ..
அடையாளத்தை மீட்டு - அதில்
அமர்ந்து மேடை ஏறிட
திட்டம் பெரிதாய் நடக்குது ...
அனைத்தையும் கவனித்து
மேடை ஏற்றும் வல்லமை
கைவிரலுக்கு தானே இருக்குது ....
- திவ்யா சத்யப்ரகாஷ்

எழுதியவர் : திவ்யா சத்யப்ரகாஷ் (23-Nov-17, 10:13 pm)
சேர்த்தது : DivyaPrakash56
Tanglish : arasiyal medai
பார்வை : 416

சிறந்த நகைச்சுவைகள்

மேலே