மேடைப்பேச்சு

கட்சித் தலைவர் ஒருவர் பெண்ணுரிமைக்கோரி
போராடும் ஒரு மகளிர் மன்றத்தில் உரை
ஆற்றும்போது ,' பெண்களை துச்சமாய் நினைக்கும்
ஆன் வர்கம் ஒன்று யோசிக்க மறந்துவிட்டது ,இந்த
மண்ணில் பெண்ணின்றி மனிதவர்கம் விருத்தி
அடையாது அழிந்திடும் ...........பெண்ணை அடிமைப் படுத்தாதே
ஆணுக்கு சமமாய் உரிமைகள் பெண்ணிற்கு அளிப்போம்' .
என்றெல்லாம் பேசி கை தட்டல்கள் பெற்றார்.

சபையில் உட்கார்ந்திருந்த அந்த கட்சித் தலைவர்
பதினைந்து வயது மகள் ,யாரும் எதிர்பார்க்காமல்
எழுந்துகொண்டாள், பேசினாள், "என் அப்பா பேசியதற்கு
பெரும் கோஷம் தந்து ,கை தட்டினீர்கள்......ஒன்றை
நீங்கள் எல்லோரும் மறந்துவிட்டீர்களா.......மேடைப்பேச்சு
வேறு.....அது ஒரு வியாபாரம்......நிஜ வாழ்க்கையில்
இவர்கள் முகம் வேறு... இதோ பேசிய என் மதிப்பிற்குரிய
தந்தை, என் அன்னைக்கு எனக்கு தெரிந்தவரை ஒரு
சுதந்திரமும் தரவில்லையே........அவள் பிள்ளைகள் பெற்று
தரும் இயந்திரம்.......அவளுக்கு தெரிந்ததெல்லாம்
சமையல் கட்டு,வீட்டு வேலைகள் ....வெளி உலகம்
அவளுக்கு தெரியாது...... இதற்கெல்லாம் காரணம் , இதோ
பெண்ணுரிமைக்கோரி பேசின என் மதிப்பிற்குரிய அப்பா..
இப்போதெல்லாம் நாட்டில் நடப்பதும் இதுதான்......
மேடையில் தமிழ் தொன்மொழி ,என் உயிருக்கு மேல்
என்றெல்லாம் பேசி வீட்டில் பிள்ளைகளை அனுப்புவது
டூன் ஸ்கூல் ........, ஐயா, அரசியல் என்பது வெறும்
வியாபாரமே ................... ஏமாறாதீர்......தனி மனிதனாய்
போராடி ஒரு வேளை வெற்றபெறலாம் .....இந்த
அரசியல் வாதிகளோடு சேர்ந்து போராடினால் நாமும்
இப்படித்தான் பத்தாம்பசலிகள் ஆகிவிடுவோம்.....

இப்போது அரங்கமே ஸ்தம்பித்தது ..........உண்மை வெளி
வந்தது .........இரணியனுக்கு பிறந்த பிரஹலாதன் வாயில்
வெளிவந்தது போல், ஒரு அரசியவாதி பெண்ணின் மூலம்....

கட்சித்தலைவர் இப்போது தலை தொங்கப்போட்டு கொண்டு
தன பெண்ணையும் இழுத்துக்கொண்டு வேகமாக
அரங்கைவிட்டு வெளியேறினார்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Nov-17, 12:35 pm)
பார்வை : 282

சிறந்த நகைச்சுவைகள்

மேலே