விநயம்

திட்டிக்கொண்டே சண்டையிட்டாலும்
சிறந்ததையே தேடித் தரும் பாசம்

பூனைக்கே பயந்தாலும் புலியாகி
தன்னவள் துணை நிற்கும் பாதுகாப்பு

உறவுகளையும் தாண்டி அயலாயினும்
இடரில் சட்டென உதிக்கும் நம்பிக்கை

புத்துயிர் பெற்றாலும் அவள் நலமா?
எனும் இரு மனங்களின் ஏக்கம்

மணத்தில் பிள்ளையைத் தேற்றிவிட்டு
தனித்து குழந்தையாய்க் குமுறும் பிரிவு

திட்டிவிட்டோம்! எதிர்த்துவிட்டோம்!
ஊகிக்க முடியா உறவுகளின் பரிதவிப்பு


எதிர்த்து நிற்க துணிவிருந்தும்
எதையும் வாங்க பணமிருந்தும் – குடும்பம்!

அத்தனையும் தனை நாடும் சுற்றத்திற்கே!
ஆயினும் ஆணித்தனமான உண்மைகளையும்
ஆடவன் கூறினால் ஏற்குமா? இச்சமூகம்!
யாருக்கு வேண்டும் விடுதலை?

உண்மையில் சிறையுண்டு கிடப்பது யார்?
வேண்டுவது விடுதலையா? விநயமா?

ஆணுக்கு பெண் நிகரல்ல!
பெண்ணுக்கும் ஆண் நிகரல்ல!

படைப்பது பிரம்மனாயினும்,
வேண்டுதல் திருமாலிற்கே!!!

எழுதியவர் : தென்மொழி சாமியப்பன் (24-Nov-17, 6:17 pm)
சேர்த்தது : தென்மொழி
பார்வை : 225

மேலே