என் அன்புள்ள அப்பாவுக்கு
நாங்கள் உங்களுக்கு அறிவுரை கூறும் தகுதியும் இல்லை அனுபவமும் இல்லை
நீங்கள் என் வயதை தாண்டி வந்தவர்கள் குழந்தை பருவம் இளமை பருவம் கடந்து முதுமை பருவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறிர்கள்
உங்களின் உடல் உழைப்புத்தான் எங்கள் ரத்தங்களில் இன்னும் ஓடுகிறது
அன்பையும் மரியாதையையும் உங்களிடம் தான் பெற்றோம்
சமையலுக்கு என்று பெயர் போனவர்கள் நீங்கள் - ஊரில் எங்களுக்கும் பெருமைதான்
கஷ்டம் என்பதை தெரிந்தும் வளர்ந்தோம் தெரியாமலும் வளர்ந்தோம் - அது
எப்போதும் எங்களை ஆக்கிரமித்தது இல்லை
வேர்வை சிந்திய உடம்பு எப்போதும் சோம்பலை நண்பனாக்காது
எங்களை உயர்த்தி விட்ட உங்களை
ஏரியில் தூக்கி வீசிவிட மாட்டோம்
கல்லில் வடிக்கப்பட் கடவுளை விட
நெஞ்சில் வடித்தவர்கள் நீங்கள்
என்றும் நீங்கள் எங்களின் உயிருள்ள தெய்வங்கள்....