பிரமாண்ட நட்பு
அருவா தமிழ்பேசும் ஆப்பனூரில்
அழகா தமிழ்பேசும் ஆனழகா..!
பொதுவா பெண்களே கவர்ந்திழுக்கும்
பொழிவு வளம்பெற்ற பேரழகா..!
நண்பா என்னும் இன்சொல்லால்
நம்பிக்கை ஊட்டும் என்தோழா..!
அன்பா என்றும் அறம்சொல்லி
அறிவு புகட்டும் நல்தோழா..!
உயிர் எழுத்து அறியும் முன்னே
உணர்வால் நட்பை அறிய வைத்தாய்..!
உலகம் இயக்கும் அன்னை அன்பை
உண்மை நட்பால் தெரிய வைத்தாய்..!
குழம்பி போன என் மனக்குளத்தை
குடிக்கும் நீராய் தெளிய வைத்தாய்..!
குசேலன் பெற்ற கண்ணன் போல
குலம் சிறக்க வழியும் வகுத்தாய்..!
எல்லை மீறிய என் கவலைகளுக்கு
எமனாய் நின்று கல்லறை செய்தாய்..!
தொல்லை தந்த இம்சை எல்லாம்
தொலைவாய் போக நல்வழி செய்தாய்..!
நஷ்டம் என்பதே நட்பில் இல்லை
நன்மை மட்டுமே விளைய செய்தாய்..!
கஷ்டம் தந்த என் வேதனைகளுக்கு
கண்ணீர் அஞ்சலி அழகாய் செய்தாய்..!
நட்பு என்னும் நந்தவன காட்டினிலே
நறுமணம் வீசும் பூவாய் வந்தாய்..!
தப்பு எதுவும் நான் செய்தால்
தடுத்து நிறுத்தும் தீயாய் நின்றாய்..!
முத்து காக்கும் சிப்பி போலவே
முழு மூச்சாய் நட்பை காத்தாய்..!
முத்தமிழும் போற்றி வணங்கும்
முருக வடிவாய் என்றும் திகழ்ந்தாய்..!
மழை செய்யும் மகத்தான சேவைக்கு
மனிதன் கைமாறு செய்ய முடியாது..!
மலையளவு உன் மறைமுக உதவியே
மதிப்பு சொல்ல எவராலும் முடியாது..!
சிலையாய் இருக்கும் கடவுளே கூட
சில நேரம் நினைக்க முடியாது..!
அலையாய் தொடரும் உன் நட்பே
அனு அளவும் மறக்க முடியாது..!
உண்மையான உயிர் நட்பே
உனக்கான இந் பொண்நாளில்
உன் அன்பு நண்பனின்
உள்ளம் நிறைந்த வாழ்த்து இதோ...
அரியவள் அருள் என்றும் கிடைக்கட்டும்..!
அறிஞர்கள் வார்த்தை உன்னை போற்றட்டும்..!
அன்பு வாழ்த்துக்கள் நிறைவாய் சேரட்டும்..!
அரசு உந்தன் ஊதியம் உயர்த்தட்டும்..!
மலரும் பூக்களாய் இதழ்கள் சிரிக்கட்டும்..!
மண்ணில் உனது புகழ்கள் பரவட்டும்..!
வானம் நோக்கி லட்சியம் இருக்கட்டும்..!
வாசல் தேடி வாய்ப்புகள் குமியட்டும்..!
கசந்த காலங்கள் கலைந்து ஓடட்டும்..!
நடக்கும் காலங்கள் நன்மை பிறக்கட்டும்..!
இனிமையும் புதுமையும் இனி வரவாகட்டும்..!
இன்பம் மட்டுமே உன் வரமாகட்டும்..!
எண்ணியது அனைத்தும் வெற்றி காணட்டும்..!
எண்ணம் போலவே வாழ்க்கை சிறக்கட்டும்..!
உலகம் என்றும் உனக்காய் விடியட்டும்..!
உனக்கும் எனக்கும் நட்பு தொடரட்டும்..!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா