நட்பு...!!!

எட்டு கண்களுக்கும்
ஒற்றை பார்வை தரும்
நட்பை தைத்தோம் கண்னோடு

சட்டை பைகளுக்குள்
நட்பை சேகரித்து
கொட்டிக் கொண்டோம் நெஞ்சோடு...

நான்கு இதயத்திற்கும்
சேர்ந்து துடிப்பதற்கு நட்பின் இதயம் தயங்காது...

வரங்கள் ஏதுமின்றி
யுகங்கள் வாழ்வதற்கு
நட்பை விட்டால் .உரமேது..

பிரிவேது... பிரிவேது.. நட்புக்குள் பிரிவேது...
பிரிவென்னும் சொல்கூட நட்புக்கு பிடிக்காது....
தூரத்தில் இருந்தாலும்.. நம் நட்பு குறையாது..
தூக்கத்தில் இருந்தாலும்.. நட்பென்றும் உறங்காது..

எழுதியவர் : சஜா (24-Nov-17, 9:03 pm)
சேர்த்தது : சஜா
பார்வை : 347

மேலே