உண்மை

இவன் மேன்மக்களில் ஒருவன்...
அவன் பாட்டாளி...

இவன் கேட்கிறான்,
அவன் கொடுக்க மறுக்கிறான்...

மீண்டும் கேட்கிறான்,
மீண்டும் கொடுக்க மறுக்கிறான்...

மன்றாடி கேட்கிறான்,
பின்னர் இசைகிறான்...

கேட்டது அவன் பொருளை அல்ல,
இவனை சேரவேண்டிய ஒன்றை !

மன்றாடுவது இவன் தொழில் ஆகிவிட்டதோ ?

மன்றாட வைப்பது அவன் தொழில் ஆகிவிட்டதோ?

மன்றாடுவது,
இவன் அறியாமை அகலும் வரையில்தான்...

பின்,

இவன் மன்றாட மாட்டான்

'கொடுத்துவிட்டு மறுவேளையை பார்' என்பான்

அன்றாவது,

இவன் கொட்டம் அடங்குமோ? அடங்காதோ?

யாரறிவார்?

அன்றுதான் இவனுக்கு விடியல்

அந்த விடியல் விண் விடியல் அல்ல

இவன் வாழ்வின் பொன் விடியல்

இவன் மனைவிக்கு பொன் விடியல்

இவன் மக்களுக்கு பொன் விடியல்

இவ் விடியல் வருமோ?

நிச்சயம் வரும்
இவன் அறியாமை அகன்ற பின்...
அவன் ஆணவம் அகன்ற பின்....

எழுதியவர் : வெ.சத்ருக்னன் (30-Jul-11, 3:08 pm)
சேர்த்தது : shathrugnan
பார்வை : 394

மேலே