ஏக்கம்

நான் காட்டில் வாழும் சிங்கம்
நீ விண்ணில் மிதக்கும் நிலா
நான் கானகத்தின் ராஜா தான்
நீ விண்வெளியின் ராணி தான்
ராஜா என்பதால் மட்டும் உன்னை அடைந்து விட முடியுமா?

உன் நினைவு வரும் வேளையில்
நான் குளக்கரைக்குச் செல்வேன் ஏன் தெரியுமா
காற்று வாங்கவோ கவிதை புணையவோ அல்ல
அங்காவது குளத்து நீரில் நம் இருவரின்
பிம்பத்தை ஒன்றாய் காண தான்.

எழுதியவர் : மோ ரா (26-Nov-17, 12:40 pm)
Tanglish : aekkam
பார்வை : 299

மேலே