ஏக்கம்
அவன் என்னை தாங்கினாலும் நன்றே
அவன் என்னை நீங்கினாலும் நன்றே
ஆனால் தாங்கவும் முடியாமல்
நீங்கவும் முடியாமல் இருப்பது - பெரும் வேதனை
அவன் என்னை காண்பதும் நன்றே
அவன் என்னை காணாததும் நன்றே
ஆனால் கண்டும் காணாததாய்
காணாதும் காண விழைவதாய் இருப்பது - நரக வேதனை