காதல்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
என்னவளைக் கண்டுகொண்டேன்
கண்டநாள் முதல் அவள்தான்
என் மனதினில் நிறைந்துள்ளாள் -இவள்தான்
எந்தன் காதலி என்று நான் நினைத்திருக்க ,
மானசீகமாய் ....! அதை எப்படிச் சொல்வேன் அவளிடம் !
இன்றுவரை அவளோ என்னை பார்க்கவும் இல்லையே
அவளை பார்க்கும்போதெல்லாம் , காதலியே
உனக்கேன் இந்த பாராமுகம் -உனக்காகவே
மனமெல்லாம் உனதாய் ஆக்கி
என்னவளாய் என் ஆசைக்காதலியாய் ஒருநாள்
என்னை ஏற்றுக்கொள்வாய் என்று
உனக்காகவே தவமிருக்கின்றேன் -என் தேவதையே
வந்திடுவாயோ தென்றலாய் என் முன்னே
எனக்கு வரமளித்து என்னை ஏற்று
நான் உன்னை கட்டி அணைத்து உந்தன்
மாங்கனி கன்னத்தில் முத்தங்கள் பதித்திட
காதலன் நான் ...காதலன் நான் ...நீதானே
எந்தன் காதலி என்று உன் மெல்லிய காதில்
காதல் மந்திரம் ஓத ...................
வா, வா எந்தன் காதல் தேவதையே
வரம் தந்து என்னை ஏற்றுக்கொள்
என் வாழ்விற்கு ஏற்றம் தந்து
வா, வா எந்தன் காதலியே !
ஒருபோதும் என் காதலை
ஒருமுகக் காதலாய் ஆக்கிவிடாதே !