மலரும் மங்கையும்

​கதிரவன் ஒளிக்காகக்
காத்திருந்து மலரும்
சூரிய காந்தியாய்
காதலன் வரவைக்
கண்டதும் மலரும்
காதலியின் முகமும் !

மலர்ந்த இதழ்கள்
தளர்ந்து கவிழும்
மாலைப் பொழுதில்
அணைத்துத் தழுவிய
காதலனின் பிரிவால்
வாடும் நொடியாகும் !

மலர்களின் நிலையும்
மங்கையரின் நிலையும்
மண்ணில் ஒன்றென
புரிந்தவர் கூறினர்
புலவர்கள் பாடினர்
புகழ்ந்து உரைத்தனர் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (26-Nov-17, 4:25 pm)
Tanglish : malarum mangaiyum
பார்வை : 1368

மேலே