தனிமையிலொரு மறுமலர்ச்சி கீதம்

வார்த்தைகளுக்கு இடையே அமைதிக்கு சாட்சியாக, சாட்சி கொடுப்பதற்கு இடையே வாழ்கின்றனர்...
இலைகள் விழுந்துவிட்டன...

இன்னும் ஒரு உலர்ந்த மரம்...
இன்னும் ஒரு உறிஞ்சும் சூரியன்...
கால மாற்ற மறுமலர்ச்சியில் பெருமளவில் பூக்கள் பூக்கும்...

என் நாள் வந்துவிட்டது.. ஆனால், நான் வேறு உடலில் கரையிலிருந்து தொலைவில் இருந்தேன்... தெரிந்தவர்களிடமும், தெரியாதவர்களிடமும் இருந்து, நான் சுயமாக இருக்கிறேனென்று
நான் அறிகிறேன் தனிமையாக...

பிரபஞ்சக் கூட்டுக்குள் எத்தனை உயிர்களை இணைக்கும் காற்று...
அறியாமையில் தவிக்கும் மனிதர்களுள் ஒவ்வொரு நாளும் ஏதேதோ புலம்பல்களுடன்,
நானும் வாழ்வைக் கழிக்கிறேன் உண்மைகளோடு...

நஞ்சுண்டு மாய்வதென்றால் மாபாவமன்றோ?
இறைவன் தந்த வாழ்வை வீணாக்குவதோ??
கானல்நீரில் சிக்கினான், மணலை தண்ணீராய் பருகினான்..
அதுபோலே ஆசையில் மது மயக்குண்டான்,
மாபாவமனைத்தும் இனிமையென்று பருகுகிறான்.
ஆற்றுகிறான்..

ஆக்கமுறு ஆற்றலில் ஆற்றாமை தீமை...
ஆக்கமழியும் ஆற்றலில் ஆற்றாமை நன்மை...

கடைந்தெடுக்கப்பட்ட வெண்ணெயின் சுவை அறிவாயோ?
அச்சுவைக்கு இணையாய், உன்னைக் கடைந்தெடுத்து உன் வாழ்வைச் சுவைப்பாயோ?

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (27-Nov-17, 7:12 pm)
பார்வை : 821

மேலே