கதை பேசும் கண்கள்

கதைபேசும் கண்களிலே காதல் ஏக்கம்
கனிவான பார்வையிலே அகமும் பூக்கும் !
இதயத்தின் ஓசைதனை விழிகள் மீட்டும்
இமைமூடி யிருந்தாலும் இதமாய்க் காட்டும் !
முதலாக எண்ணத்தை எடுத்துச் சொல்லும்
மொழியின்றி மௌனத்தால் மனத்தை வெல்லும் !
வதனத்திற் கழகூட்டி வசியம் செய்யும்
மையிட்ட கண்ணிரண்டும் நெஞ்சைக் கொய்தே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Nov-17, 11:57 pm)
Tanglish : kathai pesum kangal
பார்வை : 179

மேலே